அம்மா என் முதல் வரி நீயம்மா.. நீ இல்லாம நான் இவ்வளவு தூரம்… அம்மாவின் பிறந்தநாளுக்கு உருகிய விக்னேஷ் சிவன்..!

By Mahalakshmi on ஆடி 27, 2024

Spread the love

இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது அம்மாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் போடா போடி என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். சிம்பு, வரலட்சுமி சரத்குமார் ஆகிய நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் அந்த அளவுக்கு வரவேற்பு கொடுக்கவில்லை. இதனால் பல வருட காத்திருப்பதற்குப் பின்பு விஜய் சேதுபதி, நயன்தாராவை வைத்து நானும் ரவுடி தான் என்ற திரைப்படத்தை எடுத்தார்.

   

   

இந்த திரைப்படம் தான் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. மேலும் இந்த திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த போதுதான் நயன்தாராவுக்கும் விக்னேஷ்வனுக்கும் இடையே காதல் மலர்ந்தது.  இதையடுத்து 2022 ஆம் ஆண்டு ஜூன் 9ம் தேதி மகாபலிபுரத்தில் மிக பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.  திருமணத்திற்கு பிறகு நான்கே மாதங்களில் குழந்தை பெற்றுக் கொண்டார் நயன்தாரா.

 

இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்றுக் கொண்டதாக விளக்கம் அளித்தார்கள். தற்போது விக்னேஷ் சிவன் நயன்தாரா தனது குழந்தைகளுடன் மிக மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றார். சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய விக்னேஷ் சிவன் தனது மனைவி குழந்தைகள் உடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்கள் வீடியோக்களை பகிர்ந்து வருவார்.

இவை அனைத்தும் இணையத்தில் வைரலாகி வரும். தொடர்ந்து சினிமாவில் இருவரும் பிஸியாக இருந்து வருகிறார்கள். விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதனை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கி வருகின்றார். நடிகை நயன்தாராவும் தொடர்ந்து அடுத்தடுத்து திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார். ஒரு பக்கம் சினிமா மற்றொரு பக்கம் குழந்தை என்று இவர்கள் இருவரும் பிஸியாக இருந்து வருகிறார்கள்.

விக்னேஷ் சிவன் தனது அம்மா மீனா குமாரிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அவர்களுடன் எடுத்துக் கொண்ட அழகான புகைப்படங்களை பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்துக்களை பதிவிட்டு இருக்கின்றார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது: “ஒவ்வொரு முறையும் நான் என் குழந்தைகளை பார்க்கும்போது எவ்வளவு சந்தோஷப்படுகிறேன், மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

அதுபோலதான் காதல் எத்தனை வருடங்கள் கடந்தாலும் குறைந்து போவது கிடையாது. அப்படித்தான் நம் பெற்றோர்கள் நம்மை தினமும் பார்க்கிறார்கள். எவ்வளவு வளர்ந்தாலும் அதே அன்புடன் நம்மளை வளர்த்து வருகிறார்கள். அப்படிப்பட்ட அவர்களுக்கு நாம் ஒரு விஷயத்தை திருப்பி செய்ய வேண்டும்.

 

View this post on Instagram

 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

அவர்கள் விரும்பியபடி மகிழ்ச்சியாக திருப்தியாக வாழும்படி அவர்களை வைத்திருக்க வேண்டும். இனிய பிறந்தநாள் குமாரி. நீ இல்லாமல் நான் இவ்வளவு தூரம் வந்திருக்க மாட்டேன், லவ் யூ அம்மா.. இன்னும் பல வருடங்கள் இதை சிரிப்புடன் உங்கள் பிறந்த நாளை கொண்டாட வேண்டும் என்று கடவுளை வேண்டிக் கொள்கிறேன்” என விக்னேஷ் சிவன் பதிவிட்டு இருக்கின்றார்.