சிகப்பு நிற உடையில்… கவர்ச்சியில் தாராளம் காட்டும் பரதேசி பட நடிகை… லேட்டஸ்ட் போட்டோஸ்…!

By Mahalakshmi on ஆடி 24, 2024

Spread the love

நடிகை வேதிகா வெளியிட்டு இருக்கும் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

   

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற ஒரு நடிகை வேதிகா.

   

 

ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான முனி என்ற திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமான இவர் அதைத் தொடர்ந்து தமிழில் காளை, பரதேசி, காஞ்சனா 3 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

குறைந்த அளவு திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ஒரு நல்ல நடிகையாக அறியப்பட்டார் வேதிகா. அதிலும் பரதேசி திரைப்படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்றார். இப்படத்தில் அங்கம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்திருப்பார்.

இடைத்தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு காஞ்சனா 3 என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு மொழியிலும் அதிக கவனம் செலுத்தி வரும் இவர் அங்கு ஏகப்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

இருப்பினும் இவரால் முன்னணி நடிகையாக வலம் வர முடியவில்லை. பல வருடங்களாக சினிமா துறையில் இருந்த போதிலும் டாப் நடிகை லிஸ்டில் இல்லாமல் இருந்து வருகின்றார்.

தொடர்ந்து சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய வேதிகா, அவ்வப்போது தான் எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவார்.

இந்த புகைப்படங்கள் அனைத்தும் கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும். இதை பார்ப்பதற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது சிகப்பு நிற உடையில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.