தளபதி 69 திரைப்படத்தில் கமலஹாசன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய் . இவர் தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் கோட் என்கின்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நடந்து முடிந்து விட்டது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. இந்த திரைப்படம் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது.

இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி நடித்திருக்கின்றார். மேலும் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், சினேகா, லைலா, மைக் மோகன் உள்ளிட்ட பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவரின் அடுத்த திரைப்படம் தொடர்பான எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை.
ஆனால் தமிழ் சினிமா வட்டாரங்களில் ஹச் வினோத்துடன் இவர் தனது அடுத்த திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இதுதான் விஜயின் கடைசி திரைப்படம் என்று கூறப்பட்டு வருகின்றது. மேலும் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க அரசியல் பின்னணியை மையமாக வைத்து எடுக்கப்படும் என்றும், இது நடிகர் விஜயின் அரசியல் வாழ்க்கைக்கு உதவும் வகையில் இருக்க வேண்டும் என்பதற்காக தயாராகி வருவதாகவும் கூறப்படுகின்றது.

இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் இருக்கின்றதாம். இதில் ஏதாவது ஒரு பெரிய நடிகர்களை நடிக்க வைத்தால் தான் அது சரியாக இருக்கும் என்று கூறி வருகிறார்கள். அதனால் தான் முதலில் மோகன்லால் அவர்களை இந்த படத்தில் நடிக்க வைப்பதற்கு முடிவு செய்திருந்தார்கள்.
ஆனால் ஜில்லா திரைப்படத்தின் ஏற்கனவே இவர்கள் இருவரும் இணைந்து நடித்ததால் அது வேண்டாம் என்று முடிவெடுத்து விட்டார்களாம். தற்போது அந்த கதாபாத்திரத்தில் கமலஹாசனை நடிக்க வைப்பதற்கு முயற்சி செய்து வருவதாக கூறப்படுகின்றது. ஏனென்றால் அது அரசியல் கதைக்களம் என்பதால் அதில் கமலஹாசன் நடித்தால் சரியாக இருக்கும் என்று கூறப்படுகின்றது.

இது ஒரு புறம் இருக்க கல்கி திரைப்படத்தில் வெறும் பத்து நாள் கால் சீட்டுக்கு 150 கோடி ரூபாய் சம்பளமாக பெற்ற நிலையில் அவ்வளவு பெரிய தொகையை இந்த படத்தில் கேட்டுவிட்டால் என்ன செய்வது என்று யோசித்து வருகிறார்கள். இதனை வலைப்பேச்சு பிஸ்மி தனது பேட்டியில் தெரிவித்து இருக்கின்றார்.
