விஜயுடன் யூத் படத்தில் நடித்த ஹீரோயின் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா..? லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!!

By admin on ஆடி 19, 2024

Spread the love

விஜய் நடிப்பில் கடந்த 2002-ஆம் ஆண்டு யூத் திரைப்படம் ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தில் நடிகை ஷஹின் கான் ஹீரோயினாக நடித்துள்ளார். வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் யூத் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

   

90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர்கள் இப்போது கணவர் குழந்தை குடும்பம் என செட்டில் ஆகிவிட்டனர். நடிகை ஷஹீம் கான் ஃபேர் அண்ட் லவ்லி விளம்பரம் மூலம் பிரபலமானார். அவரை வைத்து படமெடுக்க இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் கால் சீட்டுக்காக காத்துக் கொண்டிருந்தனர். முதன் முதலில் தெலுங்கு சினிமாவில் தான் ஷஹின் கான் அறிமுகமானார்.

   

 

கடந்த 200-ஆம் ஆண்டு தெலுங்கில் நவ் தவலு என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது. அதில் ஹீரோயினாக நடித்து நல்ல வரவேற்பை பெற்றார். அதன் பிறகு தான் தமிழில் விஜய்க்கு ஜோடியாக யூத் திரைப்படத்தில் நடித்தார். அதன் பிறகு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் தேடி வந்தது. ஆனால் அதனை நிராகரித்து விட்டார். தக்வீம் ஹாசன் கான் என்பவரை ஷஹீம் கான் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அதன் பிறகு சினிமா பக்கம் தலை காட்டவில்லை. கணவர், குழந்தைகள் என மும்பையில் செட்டில் ஆகிவிட்டார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ஷஹின் கான் அவ்வபோது தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிடுவார். அதனை பார்த்த ரசிகர்கள் யூத் திரைப்படத்தில் நடித்த நடிகையா இது? இப்பவும் அழகாக ஹீரோயின் போல இருக்கிறாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.