மணிவண்ணன் சொன்ன அந்த வார்த்தை.. வாழ்க்கையவே மாத்திடுச்சுன்னு சொல்லலாம்.. மனம் திறந்த இயக்குனர் சுந்தர் சி..!

By Mahalakshmi on ஆடி 17, 2024

Spread the love

இயக்குனர் சுந்தர் சி மணிவண்ணன் குறித்து பேசி இருப்பது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர் இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்டவர் சுந்தர் சி. தமிழ் சினிமாவில் எத்தனையோ இயக்குனர்கள் நடிகர்களாக ஜொலித்து வருகிறார்கள். அப்படிப்பட்ட ஒருவர்தான் சுந்தர் சி.  இயக்குனர் ஆவதற்கு முன்பு சத்யராஜின் வாழ்க்கைச் சக்கரம் என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்தத் திரைப்படத்தை மணிவண்ணன் இயக்கியிருப்பார்.

   

அதைத்தொடர்ந்து 1995 ஆம் ஆண்டு வெளிவந்த முறைமாமன் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்ததை தொடர்ந்து தமிழில் உள்ளதை அளித்தா, மேட்டுக்குடி, அருணாச்சலம், ஜானகிராமன், நாம் இருவர் நமக்கு இருவர், உன்னை தேடி, உனக்காக எல்லாம் உனக்காக, உள்ளம் கொள்ளை போகுதே, ரிஷி, அன்பே சிவம், வின்னர், வேலை செய்யணும் குமாரு, ஆம்பள, வந்தா ராஜாவா தான் வருவேன், அரண்மனை உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியிருக்கின்றார்.

   

#image_title

 

இயக்குனராக மட்டுமில்லாமல் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த தலைநகரம் என்ற திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமான இவர் வீராப்பு, சண்டை, ஆயுதம் செய்வோம், பெருமாள் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடிகராகவும் அசத்தியிருக்கின்றார். தற்போது அரண்மனை திரைப்படத்தின் பாகங்களை எடுத்து வரும் இவர் கடைசியாக அரண்மனை 4 திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

இந்த திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. இந்த படத்தை தொடர்ந்து பேட்டி ஒன்றில் பேசியிருந்த இவர் மணிவண்ணன் குறித்து கூறியிருப்பார், அதில் அவர் தெரிவித்திருந்ததாவது “ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது அனைவரும் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தோம். அந்த சமயத்தில் புதிதாக ஒரு அசிஸ்டன்ட் டைரக்டர் வந்து இணைந்திருந்தார். அவர் பல நல்ல படங்களை இயக்கியிருந்தவர். அவர்தான் ராசு மதுரவன்.

தற்போது அவர் உயிருடன் இல்லை, அவர் அப்போதுதான் புதிதாக சேர்ந்திருந்தார்.  மணிவண்ணன் சார் அவரை அழைத்து, வா கிரிக்கெட் விளையாடலாம் என்று கூறி இருந்தார். அவருக்கு ஒண்ணுமே புரியல , நம்ம டைரக்ஷன் கத்துக்க வந்திருக்கோம். இவர் என்னடானா கிரிக்கெட் விளையாட கூப்பிடுறாரு என்று யோசித்துக் கொண்டிருந்தார். உடனே மணிவண்ணன் வாப்பா விளையாடலாம் என்று கூப்பிட்ட போது இல்ல சார் எனக்கு கிரிக்கெட் விளையாட தெரியாது என்று கூறினார்.

அப்போ டைரக்ஷன் மட்டும் என்ன உன்னோட குலத்தொழிலா உங்க அப்பா பொறக்கும்போதே டைரக்ஷன் கத்துக் கொடுத்து அனுப்பிவிட்டாரா? அந்த லைன் என் மைண்ட்ல அப்படியே நின்னுடுச்சு. அது தான் என் வாழ்க்கையின் அடித்தளம். நான் நடிக்க வந்தபோது ட்ரை பண்ணி தான் பாப்போம் அப்படின்னு ஆரம்பிச்சேன். அதுக்கு அடுத்து நான் தான் ப்ரோடியூஸ் பண்ணனும் அப்படின்ற நிலைமை வந்துச்சு சரி அதையும் பண்ணுவோம் என்று நினைத்தேன். நாலு பாலா பொறுக்கி போட்டா கிரிக்கெட் கத்துக்க போறோம் என்று அவர் சொன்ன வார்த்தை எனக்கு அப்போது நினைவுக்கு வந்தது” என்று பகிர்ந்து இருக்கின்றார்