விஜய் உடன் இணைந்து நடிக்க மறுத்த ஐஸ்வர்யா ராய்.. அதுக்கு உலக அழகி சொன்ன காரணம் என்ன தெரியுமா..?

By admin on ஆடி 12, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் விஜய்க்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விஜயை பிடிக்காதவர்கள் இருக்கவே முடியாது. அந்த அளவுக்கு விஜய் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்து வைத்துள்ளார். ரஜினியுடன் நடிக்க மாட்டோமா என காத்துக் கொண்டிருக்கும் நடிகைகள் பலர் உள்ளனர்.

விஜய்யுடன் ஐஸ்வர்யா ராய் நடிக்க மறுக்க காரணம் இது தான்..! ரகசியம் உடைத்த  பிரபலம்..! - Tamizhakam | சினிமா செய்திகள்

   

ஒரு படத்திலாவது விஜயுடன் இணைந்து நடிக்க வேண்டும் என அனைவரும் ஆசைப்படுவார்கள். அந்த அளவுக்கு சினிமாவில் அவரது மார்க்கெட் உயர்ந்துள்ளது. ஆனால் விஜய் ஒரு நடிகையுடன் இணைந்து நடிக்க ஆசைப்பட்டார் என்பது உங்களுக்கு தெரியுமா? கடந்த 2002ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் தமிழன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை மஜித் இயக்கியிருந்தார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா சோப்ரா நடித்தார். நாசர், ரேவதி, விவேக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

   

Priyanka Chopra Acting Debut Was In This Tamil Movie | GQ India | GQ India

 

இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகி மக்களுடைய நல்ல வரவேற்பை பெற்றது. முதலில் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராயை நடிக்க வைக்க இயக்குனர் நினைத்துள்ளார். தமிழன் படத்தின் கதையை முதலில் விஜய்யிடம் சொல்லி இயக்குனர் ஓகே வாங்கிவிட்டார். இந்த படத்தில் ஐஸ்வர்யா ராயை நடிக்க வைக்க வேண்டும் என திட்டமிட்டார். ஏற்கனவே ஐஸ்வர்யாராயுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது விஜய்யின் ஆசை. இதனால் இயக்குனர் சொன்ன உடனே விஜயும் ஓகே சொல்லிவிட்டார்.

தமிழன் திரைப்படம் வெளியாகி 21 ஆண்டுகள் நிறைவு! - கொண்டாடும் ரசிகர்கள் -  Little talks - Entertainment News Website

இது குறித்து இயக்குனர் ஐஸ்வர்யா ராயிடம் கூறினார். ஆனால் ஐஸ்வர்யா ராய் தமிழன் படத்தில் நடிப்பதற்கு மறுப்பு தெரிவித்தார். அவர் “வேண்டாம், விஜய் என்னை விட சின்ன பையன் மாதிரி இருப்பாரு” என கூறி ஐஸ்வர்யா ராய் மறுத்துவிட்டார். இதனால் இயக்குனர் கோபமடைந்தாராம். விஜய் அதனை சாதாரணமாக எடுத்துக்கொண்டார். அதன் பிறகு தான் மிஸ் யூனிவர்சாக இருந்த பிரியங்கா சோப்ராவை அந்த படத்தில் நடிக்க வைத்துள்ளனர்.

உலக அழகியாக எப்போதும் கொண்டாடப்படும் ஐஸ்வர்யா ராய் பெற்றோர்கள்