அடேங்கப்பா.. அட்லீ கையில் அணிந்திருக்கும் வாட்சின் விலை இத்தனை லட்சமா..? தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க..!!

By Priya Ram on ஜூலை 12, 2024

Spread the love

கோலிவுட் முதல் பாலிவுட் வரை முன்னணி இயக்குனராக வலம் வருபவர் அட்லி. முதன் முதலில் அட்லி ராஜா ராணி படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் தனது பயணத்தை ஆரம்பித்தார். முன்னதாக இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்துள்ளார். முதல் படமான ராஜா ராணி படம் சூப்பர் ஹிட் ஆனதால் அவரது மார்க்கெட் உயர்ந்தது.

சம்பளத்தில் ஷங்கரையே பின்னுக்கு தள்ளும் இயக்குனர் அட்லீ! தீயாய் பரவும்  தகவல் – News18 தமிழ்

   

அதன் பிறகு தளபதி விஜய் வைத்து தெறி படத்தை இயக்கினார். இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. விஜயும் அட்லியும் இணையும் படங்கள் சூப்பர் ஹிட் ஆனது. இதனை தொடர்ந்து விஜயை வைத்து மெர்சல், பிகில் என அட்லீ அடுத்தடுத்த படங்களை இயக்கினார். அந்த படங்களும் வசூல் சாதனை படைத்தது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் வைத்து அட்லீ ஜவான் என்ற படத்தை உருவாக்கினார்.

   

atlee thuglife moment: தமிழ்ல தான் பேசுவேன்.. பாலிவுட் மீடியாவுக்கு தக்  லைஃப் கொடுத்த அட்லீ - வைரலாகும் வீடியோ! | பொழுதுபோக்கு News, Times Now Tamil

 

பான் இந்தியா அளவில் ரிலீசான ஜவான் அட்லீக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தது. இப்போது அடுத்தடுத்த பாலிவுட் படங்களை இயக்கவும் அட்லீ திட்டமிட்டு வருகிறார். மேலும் தனது சம்பளத்தையும் அதிகரித்து விட்டார். இப்போது ஒரு படத்திற்கு அட்லி 32 கோடி சம்பளம் உயர்த்தியதாக கூறப்படுகிறது. அவரது சொத்து மதிப்பு 42 கோடி இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

Atlee childhood Photo : எடுத்த எல்லா படமும் ஹிட்டு... ஒரே படத்தில் 1000  கோடி வசூல் அள்ளிய முதல் கோலிவுட் இயக்குனர்- யார் இந்த பிரபலம்?

தற்போது பாலிவுட் நடிகர் சல்மான் கானை வைத்து அட்லீ ஒரு படத்தை இயக்கப் போகிறார் என்ற செய்தி உலா வருகிறது. ஆனால் அது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. இந்த நிலையில் சோசியல் மீடியாவில் அட்லீயின் ஒரு புகைப்படம் வைரல் ஆனது. அந்த போட்டோவில் அட்லீ HUBLOT (SPIRIT OF BIG BANGMECA-10 KING GOLD) ரக வாட்சை அணிந்துள்ளார். அந்த வாட்சின் விலை 43 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. ஒரு வாட்சின் விலை இவ்வளவா என ரசிகர்கள் ஷாக் ஆகிவிட்டனர்.

#image_title