என்னது வடிவேலு நடிப்பு சரியில்லன்னு கரெக்‌ஷன் சொன்னாரா தனுஷ்?… அதனாலதான் அந்த படத்துல இருந்து வெளிய போனாரா வைகைப் புயல்?

By vinoth on ஆடி 12, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் என் ராசாவின் மனதிலே படத்தில் தோன்றி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தார் வடிவேலு. இந்த படத்தில் இடம்பெற்ற போடா போடா புண்ணாக்கு என்ற பாடலின் சில வரிகளையும் பாடினார். இந்த படத்தில் கவுண்டமணி செந்தில் போன்ற இரு ஜாம்பவான்கள் இருந்த போதும் வடிவேலு தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் விதமாக நடித்திருந்தார்.

இதையடுத்து சிங்காரவேலன் படத்தில் கமல்ஹாசனோடு நடிக்கும் போது அவரின் உடல்மொழி பிடித்துப் போய் கமல்ஹாசன் தேவர் மகன் படத்தில் வாய்ப்பளித்தார். தேவர் மகன் படம் வடிவேலுவுக்கு ஒரு நல்ல பிரேக்காக அமைந்தாலும், இயக்குனர் வி சேகரின் இயக்கத்தில் அவர் அடுத்தடுத்து நடித்த ‘வரவு எட்டணா செலவு பத்தனா’, காலம் மாறி போச்சு, நான் பெற்ற மக்னே போன்ற படங்கள்தான் அவரை காமெடியில் உச்சம் தொட வைத்தன.

   

அதன் பிறகு கவுண்டமணி செந்திலும் மார்க்கெட்டும் டவுன் ஆக வடிவேலுவின் கொடி உயரப் பறந்தது. போட்டிக்கு விவேக் இருந்தாலும் அவரால் வடிவேலு அளவுக்கு உச்சம் தொட முடியவில்லை என்பதுதான் உண்மை. வடிவேலு மார்க்கெட் ஏற ஏற அவரின் கர்வமும் அதிகமானது. கூட நடிக்கும் நடிகர்களை மதிக்காதது, தயாரிப்பாளர்களிடம் பணம் வாங்கிவிட்டு இழுத்தடிப்பது, கால்ஷீட் கொடுத்துவிட்டு ஷூட்டிங் வராதது என அவரின் அட்ராசிட்டி அதிகமானது.

   

ஆனால் நடிப்பைப் பொறுத்தவரை அவரிடம் எந்தக் குறையும் சொல்ல முடியாது. தமிழ் சினிமாவில் கமல்ஹாசனுக்குப் பிறகு ஒவ்வொரு சின்ன அசைவிலும் தன்னுடைய நடிப்பால் கவரக் கூடியவர். அவரின் ஒவ்வொரு ரியாக்‌ஷனும் எதிரில் நடிக்கும் ஆட்களை தூக்கி சாப்பிட்டுவிடும் அளவுக்கு இருக்கும்.

 

#image_title

ஆனால் அப்படிப்பட்ட வடிவேலுவுக்கே நடிக்க தெரியவில்லை என்று ஒரு நடிகர் சொல்லி, அவருக்கு எப்படி நடிக்க வேண்டும் என பாடம் எடுத்தாராம். அவர் வேறு யாரும் இல்லை. நடிகர் தனுஷ்தானாம். சுராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த படிக்காதவன் திரைப்படத்தில் முதலில் வடிவேலுதான் காமெடியனாக நடிக்க இருந்தது. அவர் சில நாட்கள் ஷூட்டிங்கிலும் கலந்துகொண்டார்.

ஆனால் ஷூட்டிங்கின் போது வடிவேலுவை ‘இப்படி நடியுங்கள்… அப்படி நடியுங்கள்” என சொல்லி அவரின் ஈகோவை தூண்டியுள்ளார் தனுஷ். அதனால்தான் அந்த படத்தில் இருந்து அவர் வெளியேற, அவருக்கு பதில்  விவேக் வந்தார். இதை வடிவேலுவின் சக நடிகரான பாவா லட்சுமணன் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.