தென்னிந்திய சினிமாவில் இளம் நடிகையாக வளம் வரும் கீர்த்தி செட்டி வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் இளம் நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி செட்டி. தெலுங்கில் வெளியான உப்பெண்ணா என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாலும் உருவாகியது.

அதன் பின்னர் இவர் நடித்த திரைப்படங்கள் பெரிய அளவுக்கு வரவேற்பு பெறவில்லை. சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நாகசைய்தன்யா நடிப்பில் வெளியான கஷ்டடி திரைப்படம் சுமாரான வெற்றியை பெற்றுக் கொடுத்தது.

தமிழில் பாலா இயக்கத்தில் வணங்கான் திரைப்படத்தில் நடிக்க இருந்து கீர்த்தி செட்டி சில காரணங்களால் அந்த படத்தில் இருந்து விலகினார்.

தற்போது ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் ஜீனி என்கின்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய கீர்த்தி செட்டி அவ்வபோது தான் எடுக்கும் புகைப்படங்களை வெளியிடுவார். அந்த வகையில் அவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

