அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவுக்கும், நகைச்சுவை நடிகர் தம்பிராமையாவின் மகன் உமாபதி ராமையாவுக்கும் வருகிற ஜூன் 10ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ள நிலையில் திருமணத்தில் நடனமாட மணமக்களுக்கு ரிகர்சல் நடத்தப்பட்டு வருகின்றதாம். இதற்கு நடனம் அமைப்பாளராக இருப்பது சாண்டி மாஸ்டராம். இந்த தகவல் தற்போது வெளியாகி இருக்கின்றது.
தமிழ் சினிமாவில் ஆக்சன் கிங் என்று அனைவராலும் அழைக்கப்பட்டு வருபவர் நடிகர் அர்ஜுன். 90களில் பிரபல நடிகராக வலம் வந்த இவர் தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வருகின்றார். இவரது மூத்த மகள் ஐஸ்வர்யா விஷால் நடிப்பில் வெளிவந்த மதயானை கூட்டம் என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார்.
ஆனால் தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் அமையாத காரணத்தினால் சினிமாவில் இருந்து விலகி இருக்கின்றார் இவருக்கும் பிரபல காமெடி நடிகரான தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு எளிமையாக திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் வருகிற ஜூன் 10ம் தேதி அர்ஜுன் கட்டி இருக்கும் ஆஞ்சநேயர் கோயிலில் இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளது.
அதனை தொடர்ந்து ஜூன் 14ஆம் தேதி சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இந்நிலையில் சமீபத்தில்தான் நடிகை ஐஸ்வர்யா பாலியில் தனது நண்பர்களுக்கு பேச்சுலர் பாட்டி கொடுத்திருந்தார். அதைத்தொடர்ந்து இன்று குடும்பத்துடன் ஹல்தி மற்றும் மெஹந்தி போன்ற பண்டிகையை கொண்டாடி இருந்தார்.
இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. இந்நிலையில் தற்போது புதியதாக ஒரு செய்தி வெளியாகியிருக்கின்றது. அதாவது தற்போதயெல்லாம் திருமணம் என்றாலே மணமகள் மற்றும் மணமகன் நடனம் ஆடுவது என்பது இயல்பாகிவிட்டது. மாப்பிள்ளையும் பொன்னும் ஆட்டம் பாட்டம் என்று கொண்டாடி வருகிறார்கள்.
அந்த வகையில் அர்ஜுன் மகள் திருமணத்தில், திருமணத்திற்கு முதல் நாள் மற்றும் திருமண நாளன்று மாப்பிள்ளையும் பொண்ணும் நடனமாட இருக்கிறார்கள். இதற்காக சாண்டி மாஸ்டரை கொரியோகிராபராக ஒப்பந்தம் செய்து ரிகர்சல் நடத்தப்பட்டு வருகின்றதாம். இந்த செய்தி தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.