பிரபல இயக்குனரான ஷங்கர் இயக்கத்தில் உருவான இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன் நடித்துள்ளார். 5 ஆண்டுகளுக்கு முன்னரே இந்த படம் தொடங்கப்பட்டது. ஆனால் அடுத்தடுத்த தடைகள் வந்து கொண்டிருந்தது. ஒரு வழியாக இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங்கை எடுத்து முடித்தனர்.

வருகிற ஜூலை மாதம் படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தில் காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர், எஸ் ஜே சூர்யா, சமுத்திரக்கனி உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இந்தியன் 2 படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த நிலையில் இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இயக்குனர் ஷங்கருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். சங்கரின் மகள் அதிதி விருமன் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் என்ட்ரி கொடுத்தார்.

அவரை எல்லோருக்கும் தெரியும். ஷங்கரின் மகன் புகைப்படத்தை மூத்த மகள் திருமண நிகழ்வின்போது நாம் பார்த்திருப்போம். இந்த நிலையில் இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அதிதியும் ஷங்கரின் மகனும் மேடையில் பெர்ஃபார்மன்ஸ் செய்ய உள்ளார்களாம். இது ரசிகர்களிடையே மேலும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.
