விரைவில் முடிவுக்கு வரவுள்ள சன் டிவியின் முக்கிய சீரியல்.. அதிர்ச்சியில் உறைந்து போன சீரியல் ரசிகர்கள்..!!

By admin on வைகாசி 29, 2024

Spread the love

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலை பார்ப்பதற்கு ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆண் ஆதிகத்திற்கு எதிராக போராடும் பெண்களை மையமாக வைத்து இந்த சீரியல் இயக்கப்படுகிறது கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் ப்ரைம் டைமில் எதிர்நீச்சல் சீரியல் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.

Sun Tv Serial : எதிர்நீச்சல் சீரியல் நேரம் திடீர் மாற்றம்.. என்ன காரணம்  தெரியுமா? | ethirneechal serial time changed due to bigg boss season 7 in  tamil | HerZindagi Tamil

   

இயக்குனர் திருசெல்வம் இயக்க சீரியல் நடிகை ஸ்ரீவித்யா வசனம் எழுதுகிறார். இந்த சீரியலில் மதுமிதா, கனிகா, பிரியதர்ஷினி நீலகண்டன், ஹரிப்பிரியா இசை ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிப்பிலும் வில்லத்தனத்திலும் மிரட்டிய நடிகர் மாரிமுத்து ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்தார்.

   

எதிர்நீச்சல் சீரியல் நடிகர், நடிகைகளின் சம்பளம் விவரம்.. முழு லிஸ்ட் இதோ

 

ஆனால் கடந்த ஆண்டு அவர் மாரடைப்பால் உயிரிழந்ததால் அவருக்கு பதிலாக நடிகர் வேல ராமமூர்த்தி ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர்கள் போக சபரி பிரசாத், கமலேஷ், விபுராமன், சத்திய பிரியா, மோனிஷா விஜய், ஐஸ்வர்யா ரத்தம், ரித்திக் ராகவேந்திரா, திருச்செல்வம் உள்ளிட்டோர் இந்த சீரியலில் நடிக்கின்றனர்.

எதிர்நீச்சல் சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா.? ஆத்தாடி  ஒரு எபிசோடுக்கு இவ்வளவா.! | Tamil360Newz

இந்த நிலையில் வீட்டிற்கு கடைசி மருமகளாக வரும் ஜனனி ஒவ்வொருவருக்கும் சுய கவுரவத்தை புரிய வைத்து பெண்கள் யாருக்கும் அடிமை இல்லை என்பதை உணர்த்தி ஒட்டுமொத்த குடும்பத்தையும் மாற்றுகிறார். ஆதி குணசேகரின் தம்பிகளான கதிர், ஞானம், சக்தி ஆகியோர் தங்களது மனைவிகளின் பேச்சை கேட்க தொடங்கியுள்ளனர்.

Celebration in Ethirneechal serial | ethirneechal serial promo ethir  neechal serial today episode - YouTube

இப்போது பரபரப்பான கதைக்களத்துடன் சீரியல் ஓடிக்கொண்டிருக்கிறது. சுமார் 700-க்கும் மேற்பட்ட எபிசோடுகளை எதிர்நீச்சல் சீரியல் கடந்தது. விரைவில் குணசேகரனின் ஆட்டத்தை அடக்கி சீரியலை வளவளவென்று இழுக்காமல் கூடிய விரைவிலேயே முடிவுக்கு கொண்டு வர திருச்செல்வம் முடிவு செய்துள்ளாராம். இன்னும் ஒரு சில மாதத்தில் சீரியல் முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியது. டிஆர்பி-யில் முதலிடத்தில் இருக்கும் சீரியல் முடிவுக்கு வர இருப்பதாக வெளியான தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

எதிர்நீச்சலில் டாட்டா காட்டிய வேல ராமமூர்த்தி.. கால்ஷீட் பிரச்சனையா?  அவசரமாக மாற்றப்பட்ட கதை | Ethirneechal serial Vela Ramamurthy story has  also been changed for him ...