கணவன் இல்லாமல் இரண்டாவது திருமண நாளை கொண்டாடிய சீரியல் நடிகை ஸ்ருதி உருக்கமான பதிவை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருக்கின்றார்கள். நாதஸ்வரம் சீரியலில் ராகினி என்கின்ற கேரட்டரில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா. அதன் பிறகு தமிழில் வாணி ராணி, பாரதிகண்ணம்மா உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்திருந்தாலும் இவருக்கு மிகப் பெரும் புகழை பெற்றுக் கொடுத்த சீரியல் நாதஸ்வரம் சீரியல் தான்.
அந்த சீரியலில் இருக்கும் கதாபாத்திரம் போலவே சிரித்த முகமாக இருக்கும் அவருடைய வாழ்க்கையும் சோகம் நிறைந்ததாக இருக்கின்றது என்பது சண்முகப்பிரியாவின் வாழ்க்கையில் நிரூபணமாகி இருக்கின்றது. நடிகை ஸ்ருதி ஷண்முகப்பிரியா அரவிந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணமான ஒரே ஆண்டில் ஆரோவில் திடீரென்று மாரடைப்பு காலமானார்.
ஸ்ருதி அவருடைய கணவரோடு அதிகமான புகைப்படங்கள் மற்றும் ரீமிக்ஸ் வீடியோக்களை வெளியிட்டு இருப்பார். அவருடைய கணவர் மறைவு செய்தி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை பாதித்தது. இருப்பினும் வருத்தத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் வரும் ஸ்ருதி சமீபத்தில் பல பேட்டிகளை கொடுத்து வருகின்றார். அந்த பேட்டியில் கூட அவர் என்னுடன் தான் இருக்கிறார்.
அவர் என்னை விட்டு எங்கும் செல்லவில்லை. அவர் என்னுடன் இருப்பதை பலமுறை நான் உணர்கிறேன் என்று கூறி வந்தார். நேற்று அவருடைய இரண்டாவது திருமண நாள் அதை முன்னிட்டு உருக்கமான பதிவு ஒன்றே வெளியிட்டு இருக்கின்றார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது “முதல்முறையாக நீ இல்லாமல் ஒரு திருமண நாளை கொண்டாடுகிறேன்.
நீ என் அருகில் இருப்பதாக நான் நினைக்கிறேன். இந்த உலகத்தில் நீ இல்லாத திருமண நாளை கொண்டாடுவதாக பலர் கூறினாலும் நீங்க என் பக்கத்திலேயே இருப்பதாக நினைக்கிறேன். நீ எப்போதும் என் அருகிலே இருப்பாய் என்று நான் நம்புகிறேன். நான் அழுதால் உனக்கு பிடிக்காது என்பது எனக்கு தெரியும். அதனால் நான் அழப்போவதில்லை.
இன்று முழுவதும் உனக்கு பிடித்த விஷயங்களை செய்யப் போகிறேன். நாம் எப்படி வாழ ஆசைப்பட்டோமோ அப்படி வாழ்ந்து காட்டி உன்னை பெருமைப்படுத்துவேன். உன்னை சந்திக்க நான் காத்திருக்கிறேன் என்று உருக்கமாக பதிவிட்டு இருந்தார். இதை பார்த்த பலரும் அவருக்கு ஆறுதல் கூறிவரும் நிலையில் ஸ்ருதி முதியோர் இல்லத்திற்கு சென்று பலருக்கும் உதவி செய்திருந்தார். இது தொடர்பான புகைப்படங்களையும் அவர் பகிர்ந்து இருந்தார்.