தமிழ் சினிமாவில் கவின் இயக்கத்தில் கடந்த மே 10-ம் தேதி வெளியான திரைப்படம் ஸ்டார் இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக நடித்தவர் அதிதி போங்கர்.

இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

2014 ஆம் ஆண்டு மராத்தி திரைப்படத்தின் மூலமாக சினிமாவிற்கு அறிமுகமான அதிதி போங்கர். 2017 ஆம் ஆண்டு நடிகர் அதர்வா நடிப்பில் வெளியான ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் என்ற திரைப்படத்தில் சரோஜாதேவி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

இந்த திரைப்படம் தான் இவர் தமிழில் அறிமுகமான முதல் படம். பிறகு வாய்ப்பு கிடைக்காததால் வெப் சீரிஸ்களில் நடித்து வந்தார்.

2020 ஆம் ஆண்டு வெப் சீரிஸ்களில் மிகவும் கிளாமராக நடித்திருப்பார். எல்லை மீறிய கவர்ச்சியில் நடித்து இருந்ததை பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டார்கள்.

அதனைத் தொடர்ந்து தற்போது கவின் நடிப்பில் வெளியான ஸ்டார் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமாகி இருக்கின்றார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது தான் எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

