இங்க ரஜினிக்கு ‘நண்பன்’ அங்கு பாலிவுட் நடிகருக்கு ‘வில்லனா..? ஹிந்தி படத்தில் கலக்கப்போகும் சத்யராஜ்..!

By Mahalakshmi on மே 28, 2024

Spread the love

ஏஆர் முருகதாஸ் சல்மான்கான் அவர்களை வைத்து இயக்கப் போகும் சிக்கந்தர் திரைப்படத்தில் சத்யராஜ் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே ரஜினிகாந்த் திரைப்படத்தில் சத்யராஜ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்று கூறப்பட்டு வரும் நிலையில் தற்போது சிக்கந்தர் திரைப்படத்தில் அவர் இருப்பது உறுதியாகி உள்ளது.

   

 

   

தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாக பின்னர் நடிகராகி பல ஹிட் படங்களை கொடுத்தவர் சத்யராஜ். கிட்டத்தட்ட 75 திரைப்படங்களில் வில்லனாக நடித்த அசதி இருக்கும் இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 200 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

 

தொடர்ந்து தற்போது பல நடிகர்கள், நடிகைகளுக்கு தந்தை கதாபாத்திரத்திலும், குணசித்திர கதாபாத்திரத்திலும், வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து அசத்தி வருகிறார். நண்பன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ராஜா ராணி, பூஜை, பாகுபலி, மெர்சல், கடைக்குட்டி சிங்கம், வீட்டில் விசேஷம் சிங்கப்பூர் செல்லூர் லவ் டுடே போன்ற திரைப்படங்களில் புதுப்புது கதாபாத்திரங்களில் தோன்றி மக்கள் மத்தியில் நீங்கா இடத்தை பிடித்திருக்கின்றார் சத்யராஜ்.

தற்போது முக்கியமாக இரண்டு திரைப்படங்களில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் திரைப்படம் கூலி இந்த படத்தை சன் பிக்சர் நிறுவனம் தயாரிக்கின்றது. அனிருத் இசை அமைக்கின்றார். இப்படத்தில் பல பிரபலங்கள் நடிக்க உள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர் கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

ஆனால் இது தொடர்பான எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. ஏற்கனவே ரஜினிகாந்த்-க்கும் சத்யராஜ்-க்கும் இணைந்து நான் சிகப்பு மனிதன், மிஸ்டர் பாரத், மூன்று முகம், பாயும் புலி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்கள். ஆனால் இவர்களுக்கு இடையில் சிறு கருத்து வேறுபாடு இருக்கின்றது என்று கூறப்பட்டு வரும் நிலையில் 38 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி மற்றும் சத்யராஜ் இருவரும் இணைந்து படத்தில் நடிக்க இருக்கின்றார்கள்.

இதைத் தொடர்ந்து தற்போது புதிய அப்டேட்டாக சல்மான்கான் அவர்களுக்கு வில்லனாக சத்யராஜ் நடிக்க இருக்கின்றாராம். அதாவது ஏ ஆர் முருகதாஸ் சல்மான்கான் அவர்களை வைத்து சிக்கந்தர் என்கின்ற திரைப்படத்தை இயக்க இருக்கின்றார். இப்படத்தில் சத்யராஜ் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகின்றது. தமிழில் சிறப்பாக நடித்து வரும் சத்யராஜ் தற்போது பாலிவுட்டிலும் சல்மான் கானுக்கு டப் கொடுத்து நடிக்கப் போகிறார் என்று பலரும் கூறி வருகிறார்கள்.