அம்மா என் முகவரி நீயம்மா..! அருண் விஜயின் அம்மா பிறந்தநாள்.. குடும்பத்தோடு கொண்டாடிய வைரல் புகைப்படங்கள்..!

By Mahalakshmi on வைகாசி 24, 2024

Spread the love

அருண் விஜயின் அம்மாவான முத்துக்கண்ணு அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் அக்கா அனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலரும் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் மிகவும் பலம்பெறும் நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜயகுமார்.

   

இவரின் முதல் மனைவி முத்து கண்ணு. அவருக்கு இன்று பிறந்தநாள் கொண்டாடப்படுகின்றது. 70 மற்றும் 80களில் கதாநாயகனாக நடித்து பல திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுக்கு அப்பாவாகவும், தாத்தாவாகவும் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் விஜயகுமார். இவர் தனது முறை பெண்ணான முத்துக்கண்ணு என்பவரை திருமணம் செய்து கொண்டு மூன்று பிள்ளைகளை பெற்றுக் கொண்டார்.

   

 

பின்னர் நடிகை மஞ்சுளாவை காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். முத்துக்கண்ணுவின் முழு சம்பளத்துடன் விஜயகுமாருக்கு இரண்டாவது திருமணம் நடந்தது. ஒரே குடும்பத்தில் மஞ்சுளா முத்துக்கண்ணு மற்றும் அவரது குழந்தைகள் என வளர்ந்து வந்தனர். முத்துக்கண்ணுக்கு கவிதா, அனிதா, அருண் விஜயகுமார் என்று மூன்று பிள்ளைகளும், மஞ்சுளாவுக்கு வனிதா, பிரீத்தா மற்றும் ஸ்ரீதேவி என்று மூன்று பெண் குழந்தைகளும் இருக்கிறார்கள்.

எந்த ஒரு விசேஷம் என்றாலும் மொத்த குடும்பமும் ஒன்று சேர்ந்து அதனை சிறப்பாக கொண்டாடும். இதில் வனிதாவை மட்டும் விலக்கி வைத்து விட்டார்கள். மஞ்சுளா மறைவுக்குப் பிறகு வனிதா அவரின் தந்தை மற்றும் சகோதரிகளுடன் ஒத்துப் போகாமல் தனியாக வாழ்ந்து வருகின்றார்.

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார் அருண் விஜய். அடுத்தடுத்து ஹிட் திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவரது அக்கா அனிதா மருத்துவராக இருக்கின்றார். மற்றொரு தங்கை சென்னையில் செட்டிலாகி இருக்கின்றார். சமீபத்தில் தான் இவர்கள் அனைவரும் அனிதா அவர்களின் திருமணத்தை மிகவும் சிறப்பாக கொண்டாடி இருந்தார்கள்.

சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய அனிதா விஜயகுமார் எந்த ஒரு விசேஷம் என்றாலும் அது தொடர்பான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருவார். அந்த வகையில் தற்போது தனது அம்மாவின் பிறந்தநாளை குடும்பத்துடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாட இருக்கின்றார் . இது தொடர்பான புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.