Connect with us

தம்பி கார்த்திக்கின் அடுத்த படத்தை தயாரிக்கும் சூர்யா-ஜோதிகா.. டைட்டிலுடன் வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டர்..!

CINEMA

தம்பி கார்த்திக்கின் அடுத்த படத்தை தயாரிக்கும் சூர்யா-ஜோதிகா.. டைட்டிலுடன் வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டர்..!

சூர்யா மற்றும் அரவிந்த்சாமி நடிப்பில் 96 படத்தின் இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் உருவாக உள்ள திரைப்படத்தின் டைட்டில் வெளியாகியிருக்கின்றது. இப்படத்தை சூர்யா ஜோதிகாவின் 2d என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கின்றது. தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கார்த்திக்.

பருத்திவீரன் என்ற திரைப்படத்தில் நடித்து தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய கார்த்திக் பல ஹிட் திரைப்படங்களை கொடுத்திருக்கின்றார். இதுவரை 25க்கும் மேற்படுத்து திரைப்படங்களில் நடித்திருக்கின்றார் நடிகர் கார்த்தி. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ஜப்பான் திரைப்படம் அந்த அளவுக்கு வரவேற்பு பெறவில்லை .

   

 

தற்போது ‘வா வாத்தியாரே’ என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து 96 படத்தை இயக்கிய பிரேம்குமார் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது தொடர்பான தகவல் ஏற்கனவே வெளியாகி இருந்தது. இந்நிலையில் அப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.

கார்த்திக் நடிக்கும் ‘கார்த்திக் 27’ படத்தின் அப்டேட் இன்று மாலை வெளியாகும் என்று ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் அதனை 2d டைமண்ட் தயாரிப்பு நிறுவனம் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கின்றது. சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2d என்டர்டைன்மென்ட் நிறுவனம் தான் இப்படத்தை தயாரிக்கின்றது.

இப்படத்தில் நடிகர் கார்த்திக் மற்றும் அரவிந்த்சாமி இணைந்து நடிக்க இருக்கின்றனர். மேலும் நடிகை ஸ்ரீதிவ்யா ,ராஜ்கிரன், ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் இப்படத்தில் நடிக்க இருக்கிறார்கள். அதனைத் தொடர்ந்து இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் படத்தின் டைட்டிலும் வெளியாகி இருக்கின்றது. அதாவது இப்படத்திற்கு ‘மெய்யழகன்’ என்கின்ற பெயரை வைத்திருக்கிறார்கள். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top