விஜய் டிவி சீரியல் நடிகைக்கு நடந்த திருமணம்.. கழுத்தில் தாலியுடன் அவரே வெளியிட்ட புகைப்படம் வைரல்..!!

By admin on வைகாசி 23, 2024

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களை ஏராளமானோர் கண்டு ரசிக்கின்றனர். டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணியில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சூப்பர் ஹிட் சீரியல்களை விஜய் டிவியும், சன் டிவியும் போட்டி போட்டு கொண்டு களம் இறக்குகிறது.

   

அந்த வகையில் விஜய் டிவியில் வீட்டுக்கு வீடு வாசப்படி என்ற புத்தம் புது சீரியல் ஒளிபரப்பாகிறது. பிரபல சின்னத்துரை இயக்குனரான பிரவீன் பென்னட் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியலை இயக்கி வருகிறார். சின்னத்திரை நடிகர் திரவியம் ஹீரோவாக நடிக்கிறார். ஏற்கனவே இவர் ஈரமான ரோஜாவே சீரியலில் நடித்து பிரபலமானவர்.

   

 

மேலும் ஸ்ரீதா, சிவதாஸ், ஆர்த்தி சுபாஷ், ரிஷி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஆர்த்தி சுபாஷ் சீரியலில் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். முன்னதாக சன் டிவியில் ஒளிபரப்பான பாண்டவர் இல்லம் சீரியலில் கார்த்தி சுபாஷ் நடித்தார்.

மேலும் சென்னை மீம்ஸ் என்ற யூடியூப் சேனலில் சம்சாரம் அது மின்சாரம் வெப் சீரிசில் நடித்தார். பாண்டவர் இல்லம் சீரியலில் ஆர்த்தி சுபாஷ் மல்லிகா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரது விருப்பம் இல்லாமல் திருமணம் நடைபெறுகிறது.

இதனால் குடும்பத்தை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட மருமகளாக நடிக்கிறார். சீரியலில் திருமணம் முடிந்த பிறகு கழுத்தில் தாலியுடன் இருக்கும் புகைப்படங்களை ஆர்த்தி சுபாஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.