ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்க இருக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி இருக்கின்றது. இதுவரை அஜித் திரைப்படத்திற்கு இல்லாத அளவிற்கு ஓடிடியில் அதிக அளவில் விற்பனையாக இருக்கின்றது. பொதுவாக முன்னணி ஹீரோக்கள் நடித்த படங்களின் வசூல் வைத்து தான் அவர்களுடைய மார்க்கெட் உயரும்.
அப்படி எப்போதும் ஆட்டநாயகனாகவும் வசூல் சக்கரவர்த்தியாகவும் விளங்குபவர் விஜய். ஒவ்வொரு திரைப்படத்திலும் தனது வசூல் வேட்டையால் ஜோலித்து வருகிறார். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகும் திரைப்படம் கோட். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி நடித்திருக்கின்றார். மேலும் பிரஷாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா, அஜ்மல், வைபவ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள்.
இந்த சூழலில் இப்பொழுது ஓடிடி உரிமை குறித்த தகவல் வெளியானது. விஜய் படம் என்றாலே போட்டி போட்டுக்கொண்டு ஒவ்வொரு நிறுவனமும் வாங்குவதற்கு தயாராக இருப்பார்கள். விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த லியோ திரைப்படம் 120 கோடி கொடுத்து நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் வாங்கியிருந்தது. அந்த வகையில் தற்போது இந்த திரைப்படம் 120 முதல் 150 கோடி வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது
ஆனால் நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் 110 கோடிக்கு தான் கோட் திரைப்படத்தை வாங்கியிருக்கின்றது. இதுவே அந்த தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய சறுக்கல் தான். இந்நிலையில் நடிகர் அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகும் குட் பேட் அக்லி திரைப்படம் அஜித் கேரியரில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு நல்ல விற்பனைக்கு சென்றுள்ளது.
கோட் திரைப்படத்தின் விற்பனை அளவுக்கு இல்லை என்றாலும் 90 கோடி ரூபாய் கொடுத்து நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் அப்படத்தின் டிஜிட்டல் உரிமையை வாங்கி இருக்கின்றது. இந்த விற்பனையானது நடிகர் அஜித்தின் விடாமுயற்சி டிஜிட்டல் விற்பனையை விட அதிகமாகும். மகிழ்த்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படம் தற்போது மிகவும் சோகமான நிலையில் தான் உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பாதிதான் முடிவடைந்துள்ள நிலையில் மீதி ஜூன் மாதம் எடுக்க உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. இப்படத்தின் ஓடிடி உரிமம் 80 லட்சத்திற்கு விற்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.