விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஆஹா கல்யாணம் சீரியலில் நடிகை அக்ஷயா பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த சீரியலில் அக்ஷயா மகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவரது நடிப்பிற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.

ஆஹா கல்யாணம் சீரியலில் தனது அம்மாவும் தங்கையும் என்ன தவறு செய்தாலும் அதனை வெளியே கூறாமல் அவரே சரி செய்கிறேன் என்ற பெயரில் பிரச்சனையில் சிக்கிக் கொள்கிறார். ரசிகர்கள் மகா கதாபாத்திரத்தை ரசிக்கின்றனர். சிலர் விமர்சனமும் செய்கின்றனர். ஆனால் தனக்கு கொடுத்த பணியை மகா சிறப்பாக செய்கிறார்.

இந்த நிலையில் இயக்குனர் பேரரசு பகலறியான் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். வெற்றி ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் அக்ஷயா கதாநாயகியாக நடிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

இசை வெளியீட்டு விழாவில் எடுத்த புகைப்படங்களை அக்ஷயா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதனை பார்த்து ரசிகர்கள் அக்ஷயாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


