மனைவியை இழந்து வறுமையில் தவித்த நபருக்கு.. கூல் சுரேஷ் செய்த மிகப்பெரிய உதவி.. வைரலாகும் வீடியோ..!

By Mahalakshmi on வைகாசி 20, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான சாக்லேட் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி காமெடி கதாபாத்திரங்களிலும், சந்தானத்தின் பல திரைப்படங்களிலும் நடித்து பிரபலமானவர் கூல் சுரேஷ். சந்தனத்துடன் மட்டும் இல்லாமல் சிம்பு, அஜித் உள்ளிட்ட பல நடிகர்களுடனும் இவர் சேர்ந்து நடித்திருக்கின்றார்.

   

சிம்புவின் தீவிர ரசிகரான இவர் அவரின் திரைப்படங்களை புரமோஷன் செய்தே பிரபலமாகிவிட்டார். அதிலும் வெந்து தணிந்தது காடு, சிம்புவுக்கு வணக்கத்தை போடு என்கின்ற டயலாக் மூலம் மிகப்பெரிய புகழை அடைந்து விட்டார். எந்த பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் ரிலீசானால் போதும் முதல் ஆளாக படத்தை பார்த்துவிட்டு விமர்சனத்தை கூறுவார்.

   

அதிலும் எந்த திரைப்படத்திற்கு செல்கிறாரோ? அப்படத்தின் நடிகர்கள் கெட்டப்பில்தான் திரையரங்குக்கு செல்வார். நடை, உடை, பாவனை அனைத்தையும் மாற்றிக்கொண்டு அப்பிடத்திற்கு விளம்பரத்தை ஏற்படுத்திக் கொடுப்பது நடிகர் கூல் சுரேஷின் ஸ்டைல். சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட இவர் நல்ல வரவேற்பு பெற்றார்.

 

எதார்த்தமாக பேசி ரசிகர்களால் நல்ல வரவேற்பு பெற்ற இவர் நிறைய நாட்கள் போட்டியில் நீடித்தார். பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய இவர் வழக்கம் போல் சர்ச்சையான கருத்துக்களை பேசி பிரபலமாகி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட கன்னி திரைப்படத்தின் பிரமோஷனுக்கு சென்றிருந்தார். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் பெண் வேடமிட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருந்தார்.

பச்சை நிற டாப் மற்றும் சிவப்பு நிற தாவணி அணிந்து பெண்ணை போலவே நடந்து வந்தார். அங்கிருந்து அனைவரும் வியப்புடன் பார்த்து வந்தார்கள். இப்படி எப்போதும் தான் செல்லும் இடங்களுக்கெல்லாம் தன்னை திரும்பி பார்க்கும் அளவுக்கு ஏதாவது ஒரு விஷயத்தை செய்வது இவரது ஸ்டைல். ஆனால் அதையெல்லாம் தாண்டி தற்போது ஒரு விஷயத்தை செய்து இருக்கின்றார்.

அதாவது கூல் சுரேஷ் நற்பணி மன்றம் சார்பாக ஒரு நபருக்கு ஆட்டோ ஒன்றை வாங்கி கொடுத்திருக்கின்றார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வருகின்றது. அந்த வீடியோவில் அவர் தெரிவித்திருந்ததாவது “தன் மனைவியை இறந்த பிறகு மிகவும் மனதளவில் உடைந்து போய் இருந்தார். ஆனால் அப்படியெல்லாம் இல்லை.

கூல் சுரேஷ் நண்பர்கள் நற்பணி மன்றம் உங்களுக்காக இருக்கு என்று கூறி அவருக்கு ஆட்டோ வாங்கி கொடுக்க முடிவு செய்தேன். கவலைப்படாதீங்க பாய்.. உங்களுக்கு நாங்க இருக்கோம்” என்று கூறி ஆட்டோ ஒன்றை பரிசாக வாங்கி கொடுத்திருந்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.