தமிழ் சினிமாவில் 70 மற்றும் 80களில் பிரபல நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் சிவக்குமார். தன்னுடைய சிறப்பான நடிப்பால் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்ற இவர் தற்போது வரை இளமை மாறாத மார்க்கண்டேயன் என்ற அடைமொழியுடன் புகழப்பட்டு வருகின்றார். எம்ஜிஆர், சிவாஜி போன்ற நடிகர்களுடன் இணைந்து சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார் சிவகுமார்.

80ஸ் காலகட்டத்தில் ஹீரோவாக பல திரைப்படங்களில் நடித்து அசத்தியிருக்கின்றார். பின்னர் 90களுக்குப் பிறகு குணச்சித்திர நடிகராக சூர்யா, விஜய், அஜித் உள்ளிட்ட பல நடிகர்களுக்கு அப்பாவாக மற்றும் நடிகைகளுக்கு அப்பாவாகவும் நடித்திருக்கின்றார். சினிமாவை தாண்டி ஓவியம் வரைதல், யோகா செய்வது, சீரான உடற்பயிற்சி, இயற்கை உணவு ஆகியவற்றின் மேல் அதிகம் அக்கறை கொண்ட ஒரு நடிகர்.
இவருக்கு திருமணமாகி இரண்டு ஆண் குழந்தைகள் மற்றும் ஒரு பெண் குழந்தை இருக்கின்றது. நடிகர் சூர்யா மற்றும் கார்த்திக் இருவரும் சினிமாவில் பிரபல நடிகர்களாக ஜொலித்து வருகிறார்கள். இவரது மகளும் தற்போது சினிமாவில் பாடகியாக அறிமுகமாக இருக்கின்றார். இவரது குடும்பமே கலை குடும்பமாக வலம் வருகின்றது. இந்நிலையில் இவருடைய திருமணம் குறித்த ஒரு சுவாரசிய தகவல் வெளியாகி இருக்கின்றது.

இவருடைய குடும்பத்தார் இவருக்கு நீண்ட நாட்களாக பெண்பார்த்து வந்திருக்கிறார்கள். ஆனால் சரியான பெண் கிடைக்காததால் வருத்தத்தில் இருந்திருக்கிறார்கள். பல இடங்களில் தேடியும் சிவகுமாருக்கு திருமணம் கைகூடவில்லை. ஒரு சமயம் பிரபலம்பெறும் நடிகையான பானுமதி சிவகுமாரிடம் உங்களுக்கு திருமணம் ஆகி விட்டதா என்று கேட்டிருக்கிறார்கள்.
உடனே சிவக்குமார் இல்லை என்று கூற நாளை நீங்கள் வரும்போது உங்கள் ஜாதகத்தை எடுத்து வாருங்கள் என்று கூறி இருக்கிறாராம், பானுமதி சொன்னது போல் சிவகுமாரும் ஜாதகத்தை எடுத்து வந்து கொடுத்திருக்கின்றார். அதை பார்த்ததும் இந்த வருடம் செப்டம்பர் மாதத்திற்குள் உங்களுக்கு திருமணம் நடக்கும்,

அப்படி நடக்கவில்லை என்றால் குழந்தையுடன் இருக்கும் விதவைப் பெண்ணை நீங்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறி கூறியிருக்கிறார். அவர் சொன்னதைப் போலவே அந்த வருடம் ஜூலை ஒன்றாம் தேதி சிவகுமாருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இதனை பிரபல சினிமா தயாரிப்பாளர் மற்றும் நடிகருமான சித்ரா லட்சுமணன் ஒரு பேட்டியின்போது கூறியிருக்கின்றார்.
