அந்த நடிகையும் இல்ல, இந்த நடிகையும் இல்ல.. ஜீ தமிழ் சீரியலில் ஏற்பட்ட குழப்பம்.. கடைசில எண்டு கார்டு போட்டதுதான் மிச்சம்..!

By Mahalakshmi on வைகாசி 12, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் பல தொலைக்காட்சிகளில் சீரியல்கள் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வீட்டில் இருக்கும் பல இல்லத்தரசிகள் விரும்பி பார்ப்பது சீரியல் தான். சன் மற்றும் விஜய் தொலைக்காட்சியை அடுத்து அதிக சீரியல்களை ஒளிபரப்பி வருவது ஜீ தமிழ் தான். அண்ணா, கார்த்திகை தீபம், மாரி, நளதமயந்தி என பல ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.

   

இவை அனைத்தும் குடும்பங்கள் கொண்டாடும் தொடர்களாக இருக்கின்றது. ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்புக்கு இடையில் ஒளிபரப்பான சீரியல் தான் சீதாராமன். இந்த சீரியல் சமீபத்தில் முடிந்து விட்டது. நல்ல விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் எதற்கு திடீரென்று முடிவு பெற்றது என இன்னும் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருந்து வரும் நிலையில் தற்போது மற்றொரு சீரியல் முடிவுக்கு வந்துள்ளது.

   

 

ஜீ தமிழில் நளதமயந்தி என்ற தொடரில் பிரியங்கா நல்காரி நடித்துக் கொண்டிருந்தார். திடீரென அவர் இந்த சீரியலில் இருந்து விலகி விட்டதாகவும், அவருக்கு பதிலாக ஸ்ரீநிதி நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்த தகவலை கேட்ட பிரியங்கா மறுப்பு தெரிவித்து தவறான செய்திகளை பரப்பாதீர்கள் இது எதுவும் உண்மை இல்லை என்று கூறியிருந்தார். இந்நிலையில் பிரியங்கா நல்காரி கேரக்டரின் முக்கியத்துவம் குறைக்கப்பட்டு வருவதாகவும் கதை வேறு திசையில் செல்வதால் பிரியங்கா இந்த சீரியலில் இருந்து விலகப் போவதாக கூறப்பட்டுள்ளது.

தற்போது திடீர் திருப்பமாக நளதமயந்தி தொடரின் கிளைமாக்ஸ் காட்சி படமாகி முடிந்து விட்டதாகவும், கிளைமாக்ஸ் காட்சியில் பிரியங்கா நல்காரி இறந்தது போல் காட்டி இருப்பதாக கூறப்படுகின்றது. மேலும் ஸ்ரீநிதி சிறப்பு தோற்றத்தில் இந்த சீரியலில் நடித்திருக்கின்றார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசி இருந்த ஸ்ரீநிதி எனக்கு இந்த தொடரில் நான் என்ன கதாபாத்திரத்தில் நடிக்க போகிறேன் என்று தெரியவில்லை என்று தெரிவித்திருந்தார்.

இப்படி நாயகிகள் குழப்பம் ஒரு பக்கம் இருக்க திடீரென்று இந்த சீரியலை ஏன் முடித்தார்கள் என பலரும் குழம்பிப் போய் இருக்கிறார்கள். இந்த சீரியலின் கடைசி காட்சிகள் எடுக்கப்பட்டு விட்டதாக சில புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அதுமட்டுமில்லாமல் பிரியங்கா நல்காரி தனது கணவருடன் சேர்ந்து மலேசியாவில் புதிய ஹோட்டல் ஒன்றை தொடங்கியிருக்கின்றார். இதனால் நடிப்பதை விட்டுவிட்டு முழுக்க முழுக்க பிசினஸில் கவனம் செலுத்தப் போகிறார் என்று பலரும் கூறி வருகிறார்கள்.