நான் உதவி பண்ணாதனால தான் சேஷு இறந்து போயிட்டாரா..? நடந்ததை வெளிப்படையாக சொன்ன சந்தானம்..!

By Mahalakshmi on வைகாசி 7, 2024

Spread the love

விஜய் டிவியில் பல வருடத்திற்கு முன்பு ஒளிபரப்பான நிகழ்ச்சி லொள்ளு சபா. இந்த நிகழ்ச்சி தற்போது வரை மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது என்றால் அதற்கு காரணம் அதில் நடித்திருந்த பிரபலங்கள்தான், சந்தானம், ஜீவா, யோகி பாபு, சேஷு , மாறன் உள்ளிட பல நடிகர்கள் தற்போது சினிமாவில் மிகப்பெரிய பிரபலங்களாக மாறி இருக்கிறார்கள்.

   

லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமான சேஷு கடந்த மார்ச் 26 ஆம் தேதி உயிரிழந்தார். இவர் உயிரிழந்த செய்தியை கேட்டு லொள்ளு சபா நிகழ்ச்சியை சேர்ந்த பல பிரபலங்கள் அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். நடிகர் சேஷு உயிர் இழப்பதற்கு பத்து நாட்களுக்கு முன்பு தான் லொள்ளு சபா டீமை ஒருங்கிணைத்து ரியூனியன் நிகழ்ச்சியை நடத்தி இருந்தார்.

   

 

அதைத்தொடர்ந்து ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயர்ந்தார். இவரின் மறைவுக்கு சந்தானம் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி சென்றார். லொள்ளு சபா காலத்திலிருந்து வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் வரை பல பட வாய்ப்புகளை வழங்கியிருந்தார் சந்தானம்.

இதற்கிடையில் தற்போது நான் தான் கிங்கு என்ற திரைப்படத்தின் பிரஸ் மீட் சமீபத்தில் நடைபெற்றது. இதில் செய்தியாளர் ஒருவர் நடிகர் சேஷு உயிரிழந்ததற்கு நடிகர் சந்தானம் பணம் கொடுத்து உதவவில்லை என்று கூறியிருந்தார்கள். ஆனால் தற்போது இந்த திரைப்படத்தில் நடித்திருந்த ஆண்டனி அவர்கள் மருத்துவமனையில் அனுமத்திருந்த நிலையில் அவரிடம் கேட்டபோது தனக்கு மருத்துவ செலவு அனைத்தையும் சந்தானம் தான் செய்கிறார் என்று கூறியிருந்தார்.

 

இப்படி உங்கள் மீது எதற்கு தேவையில்லாத புகார்கள் வருகிறது என்று கேள்வி எழுப்பிய நிலையில் நாம் நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும். நிறைய பேர் தன்னை ரசித்து தான் நடிக்கும் படங்கள் நன்றாக இருக்கிறது என்று கூறுகிறார்கள். ஆனால் சிலர் நான் என்னதான் காமெடி பண்ணாலும் அதை ரசிக்க கூடாது என்று இருப்பவர்களை எப்படி சரி கட்ட முடியும், அப்படித்தான் பலரும் என்று பேசி இருந்தார் சந்தானம்.