Connect with us

CINEMA

லீவு பசங்களுக்கு மட்டும் இல்ல ‘விடாமுயற்சி ‘க்கும் தான்… டேக் ஆப் ஆகாமல் படம்… எஸ்கேப் ஆன அஜித்… 

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் தற்பொழுது விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.

   

அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா, பிரியா பவானி ஷங்கர் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.  இப்படத்தில் நடிக்க நடிகர் அஜித்துக்கு 105 கோடி சம்பளமாக பேசப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. இப்படத்தின் தலைப்பை விடாமுயற்சி என்று வைத்தாலும் படத்திற்காக ஒரு முயற்சி கூட எடுக்கவில்லை என்று ரசிகர்கள் ஒரு பக்கம் கதறி வந்தனர்.

இந்நிலையில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்தது. கடுமையான பனிப்பொழிவு ஒருபுறம்  லைக்காவின் பொருளாதார நெருக்கடி மறுபுறம் என மீண்டும் தற்பொழுது படப்பிடிப்பு தடைபட்டுள்ளது. இதைத்தொடர்ந்து சூப்பர் ஸ்டாரின் வேட்டையன் திரைப்படத்தில் கிடைக்கும் லாபத்தை கொண்டு இத்திரைப்படத்தை தொடரலாம் என திட்டம் போட்டது தயாரிப்பு குழு.

இந்நிலையில் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு மே 12 வரை நடைபெறும் என்பதால் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு இனி நடக்காது என்று கூறப்படுகிறது. எனவே மீண்டும் லீவு கிடைத்ததால் தல அஜித் பைக் டூர் சென்று விட்டாராம். தற்பொழுது ரசிகர்கள் லீவு பசங்களுக்கு மட்டும் இல்ல ‘விடாமுயற்சி’க்கும் தான் என  கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

Continue Reading

More in CINEMA

To Top