ரத்னம் பட பிரமோஷன்.. பிரியா பவானி சங்கர் வராததற்கான காரணத்தை உருட்டிய விஷால்.. ஆனா விஷயமே வேற..!

By Mahalakshmi on ஏப்ரல் 24, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் விஷால். இவர் ஹரி இயக்கத்தில் தேவி ஸ்ரீ பிரசாந்த் இசையில் ரத்னம் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருக்கின்றார். மேலும் சமுத்திரகனி, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார்கள்.

   

இப்படம் வருகிற 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனால் பட குழுவினர் பட பிரமோஷன் வேலைகளில் தீவிரமாக இறங்கி இருக்கிறார்கள். கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு சென்னையில் பிரஸ்மீர் நடைபெற்றது. இதில் இயக்குனர் ஹரி, விஷால் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். ஆனால் நடிகை பிரியா பவானி சங்கர் மட்டும் பங்கேற்கவில்லை.

   

 

இது குறித்து பேசிய விஷால் நடிகை பிரியா பவானி சங்கர் மற்ற படங்களில் பிஸியாக இருப்பதால் ப்ரொமோஷன்களில் கலந்து கொள்ளவில்லை என்று தெரிவித்திருந்தார். ஆனால் உண்மையில் விஷயம் அது அல்ல, பிரியா பவானி சங்கருக்கும் படக்குழுவினருக்கும் இடையே சிறிய கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்பட்டு வருகின்றது.

மேலும் பிரியா பவானி சங்கர் நடித்த திரைப்படங்கள் பெரிய அளவு ஓடாத காரணத்தினால் அவரை பிரமோஷனுக்கு அழைக்க வேண்டாம் என்று விஷாலே இயக்குனர் ஹரியிடம் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. செண்டிமெண்டாக அவர் பிரமோஷன்களில் கலந்து கொள்ள வேண்டாம் என்று கூறியிருக்கிறாராம். ப்ரோமோஷன் மட்டுமில்லாமல் பட போஸ்டரில் கூட பிரியா பவானி சங்கரை தவிர்த்து இருக்கின்றார் விஷால். இந்த தகவலை வலைப்பேச்சு பிஸ்மி, அந்தணன் தெரிவித்திருக்கிறார்கள்.