Connect with us

CINEMA

கண்ணதாசனை என்னால் வெல்ல முடியாது… ஆனால் அவருக்கு என்ன நிரூபிக்கணும்னு எழுதிய பாட்டு அது- வைரமுத்து பெருமிதம்

இளையராஜாவோடு இணைந்து பல பாடல்களை உருவாக்கி காலத்தால் அழியாத பல இனிமையான பாடல்களைக் கொடுத்தவர் வைரமுத்து. 1980 ஆம் ஆண்டு இருவரும் நிழல்கள் திரைப்படத்தில் இடம்பெற்ற இது ஒரு பொன்மாலைப் பொழுது என்ற பாடலின் மூலம் இணைந்தார்கள். அதன் பிறகு இருவருக்கும் இடையிலான நட்பு அதிகமாகி அடுத்தடுத்த ஆண்டுகளில் இளையராஜா இசையில் அதிக பாடல்கள் எழுதியவராக இருந்தார்.

இளையராஜா எந்தளவுக்கு வைரமுத்து மேல் அபிமானம் வைத்திருந்தார் என்றால் பாடலாசிரியரான தன் தம்பிக்குக் கூட வாய்ப்புகள் கொடுக்காமல் வைரமுத்துவுக்கு அதிக பாடல்களைக் கொடுத்தார். ஆனால் இவர்களின் கூட்டணி ஒரு கட்டத்தில் பிரிந்தது. அதற்குக் காரணம் இருவருக்கும் இடையிலான படைப்பு ரீதியிலான கருத்து வேறுபாடுதான் என்று சொல்லப்படுகிறது. அதன் பிறகு 35 ஆண்டுகளாக சினிமாவில் பணியாற்றி வந்தாலும் இணைந்து ஒரே ஒரு பாடல் கூட பணியாற்றவில்லை. பலரும் அவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்த போதும் அது நடக்கவில்லை.

   

இந்நிலையில் இளையராஜா இசையில் தான் எழுதிய அந்திமழை பொழிகிறது பாடல் பற்றி வைரமுத்து ஒரு சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்துள்ளார். ஒரு மேடைப் பேச்சில் “ராஜ பார்வை படத்தில் கண்ணதாசன் அழகோ அழகு என்ற பாடலை எழுதினார். அதே படத்தில் எனக்கும் ஒரு பாடல் எழுதும் வாய்ப்புக் கிடைத்தது.

அப்போது நான் நினைத்துக் கொண்டேன். கண்ணதாசனை என்னால் வெல்ல முடியாது. அது என் நோக்கமும் இல்லை. ஆனால் அவருக்கு நான் என்னை நிரூபிக்கவேண்டும் என்று முடிவு செய்து எழுதினேன். அந்த பாடல்தான் அந்திமழை பொழிகிறது பாடல். கண்ணதாசனுக்கு பிறகு வாலிக்கு என்னை நிரூபிக்க பாடல் எழுதினேன். அதன் பின்னர் இப்போது என் மகன் மதன் கார்க்கிக்கு என்னை நிரூபிக்க பாடல் எழுதிக் கொண்டிருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

Continue Reading

More in CINEMA

To Top