5 பாடகர்கள்.. வெவ்வேறு ஜெனர்.. நம்மை குதூகலப்படுத்திய இந்த பாட்டுக்குள்ள இத்தன விஷியன்கள் இருக்கா?

By Begam on ஏப்ரல் 24, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் வடிவேலு. தன்னுடைய நடிப்பால் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளார். பல வருடங்களாக நடிக்காமல் இருந்த நடிகர் வடிவேலு , நடிகர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் இறுதிப்படமான மாமன்னன் திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.

   

இதைத்தொடர்ந்து தற்பொழுது படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார். 2006 ஆம் ஆண்டு வடிவேலு ஹீரோவாக நடித்து வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் தான் ‘இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி’ இயக்குனர் ஷங்கரின் பிரமாண்ட தயாரிப்பில் சிம்பு தேவன் இயக்கிய இப்படம் ரசிகர்களில் தாறுமாறாக ஹிட் அடித்தது.

   

 

காமெடியில் கலக்கிய வடிவேலுவை கதாநாயகனாக களமிறக்கி கல்லா கட்டினார்கள். பாக்ஸ் ஆபிஸிலும் முன்னணி நாயகர்களுக்கு இணையான வசூலை அள்ளியது. ஆனால் அடுத்தடுத்து ஹீரோவாக நடித்த இந்திரலோகத்தில் நா.அழகப்பன், ‘தெனாலிராமன்’, ‘எலி’ போன்ற திரைப்படங்களுக்கு மக்களிடம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்காமல் தோல்வியை தழுவியது. இதனால் பாக்ஸ் ஆபிஸிலும் மண்ணை கவ்வியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ‘இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி’ இடம்பெற்ற ‘ஆடி வா பாடி வா’ என்ற அந்தப்புர பாட்டுக்குள் இவ்ளோ விஷயங்களா..? என நாம் வியக்கும் அளவுக்கு இதில் கருத்துக்கள் உள்ளதாம். முதலில் இந்த பாடலை புலமை பித்தன் என்ற பாடலாசிரியர் எழுதியுள்ளார்.  இந்த பாடலுக்குள் ஒரு குத்தாட்டம்,  ஒரு கொண்டாட்டம் இருக்கும், ஒரு மெல்லிசை இருக்கும். மேலும் இந்த பாடலை பாடகர் மாணிக்க விநாயகம் ,கோவை கமலா, பின்னி கிருஷ்ணகுமார், வடிவேலு, சைந்தவி என பலரும் பாடியது குறிப்பிடத்தக்கது.