மருமகனா இல்லன்னா என்ன எப்போதும் ரசிகன் தான்.. ரஜினியின் கூலி டீசருக்கு தனுஷ் போட்ட ட்வீட்..!

By Mahalakshmi on சித்திரை 23, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவரை பிடிக்காதவர்கள் என்று யாருமே இருக்க முடியாது.அதிலும் திரை துறையை சேர்ந்த பலருக்கும் இவருடன் ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்று அனைவரும் ஆசைப்படுவது உண்டு. ரஜினியின் மருமகனாக இருந்தாலும் எப்போதும் ரசிகனாக இருப்பவர் நடிகர் தனுஷ்.அதுவும் மேடைப்பேச்சுகளில் தனுஷின் பேச்சை கேட்கும் போது அப்படியே ரஜினி பேசுவது போலவே இருக்கும்.

   

அவர் ஸ்டைலை தற்போதும் நடிகர் தனுஷ் பின்பற்றி வருகிறார்.அவரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்ட இவர் சமீபத்தில் விவாகரத்துக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.இவர்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்தாலும் சூப்பர் ஸ்டாரின் ரசிகனாக தற்போதும் இருந்து வருகிறார் தனுஷ்.

   

 

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் நடிகர் ரஜினி நடிக்கும் திரைப்படத்தின் டைட்டில் டீசர் நேற்று வெளியானது. இதற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்திருந்த நிலையில். நடிகர் தனுஷும் அந்த போஸ்டரை வெளியிட்டு மாஸ் என்று பதிவிட்டு இருக்கின்றார்.தனுஷின் இந்த பதிவை பார்த்த பலரும் ஆசிரியப்பட்டு போய் இருக்கிறார்கள்.

மனைவியை விவாகரத்து செய்த போதிலும் ரஜினியின் படத்திற்கு தனுஷ் போட்ட இந்த பதிவு ரஜினி மீது தனுஷ் வைத்திருக்கும் மரியாதையை காட்டுகின்றது. இவர்கள் இருவருக்கும் தற்போது வரை சுமுகமான உறவு இருந்து வருகிறது என்று பலரும் தெரிவித்து வருகிறார்கள்.