ஹீரோயின் விட அழகா இருந்தா.. 43 வயசுல தான் கல்யாணம்.. மனம் திறந்து பேசிய ‘படையப்பா’ லாவண்யா..

By Mahalakshmi on ஏப்ரல் 23, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்த பிரபலமானவர் லாவண்யா. 1997 ஆம் ஆண்டு சூரியவம்சம் திரைப்படத்தில் சிறிய கேரக்டரில் அறிமுகமான இவர் தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஆனாலும் பெரிய அளவுக்கு இவரால் ஜொலிக்க முடியவில்லை. நடிகை லாவண்யா சங்கமம், படையப்பா, ஜோடி, சேது, தெனாலி, சமுத்திரம், வில்லன், திருமலை, தங்க மகன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார்.

   

பின்னர் சினிமாவை விட்டு விலகிய லாவண்யா சீரியல்களில் நடித்து வந்தார். சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த அருவி சீரியலில் இவர் தற்போது நடித்து வருகிறார். கடந்த வருடம் இவர் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு திருமணம் ஆகும்போது வயது 43. ஏன் இவ்வளவு நாட்கள் திருமணம் செய்யவில்லை என்று பலரும் கேள்வி எழுப்பியிருந்தார்கள். அதற்கு பதில் தெரிவித்திருக்கின்றார் லாவன்யா.

   

 

எனது குடும்ப சூழ்நிலை, எனக்கு பெரிய அளவில் வருமானம் இல்லாததால் அடுத்தடுத்து வேலைகளிலேயே முழு கவனத்தையும் செலுத்திக் கொண்டிருந்தேன். அதனால் திருமணம் செய்து கொள்ள வேண்டிய எண்ணம் எனக்கு வரவில்லை. பின்னர் என்னுடைய நண்பர் மூலம்தான் எனது கணவர் அறிமுகமானார். அவரிடம் பழகும் போது காதலாக மாறி திருமணத்தில் முடிந்தது என்று கூறியிருந்தார்.

மேலும் தற்போதும் நடித்துக் கொண்டுதான் இருக்கின்றேன் என தெரிவித்தார். சினிமாவில் பல திரைப்படங்களில் நான் நடித்திருந்தாலும் எனக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. கதாநாயகிகளை விட நான் சில இடங்களில் அழகாக தெரிந்தால் மேக்கப் போட்டுவிட்டு அசிங்கமாக்கி விடுவார்கள். நிறைய படங்களில் இப்படி நான் சந்தித்திருக்கின்றேன். ஒரு திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு வந்தது ஆனால் கடைசிவரை அப்படி வெளியில் வராமலேயே போனது என்று மிக உருக்கமாக பேசியிருந்தார் லாவன்யா.