தரணி இயக்கத்தில் ஹிட்டான 4 படங்கள்.. தளபதிக்கு லைஃப்டைம் செட்டில்மென்ட் கொடுத்த “கில்லி”..

By Mahalakshmi on சித்திரை 22, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கியவர் தரணி. இவர் இயக்கிய எதிரும் புதிரும், தில், தூள், கில்லி, குருவி, ஒஸ்தி போன்ற திரைப்படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளது. விஜய் மற்றும் விக்ரமுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக இவர் இயக்கிய படங்கள் அமைந்திருக்கின்றன. அப்படிப்பட்ட இயக்குனர் தற்போது எங்கே என பலரும் ஆவலாக எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

   

ஆனால் தற்போது இவர் திரைப்படங்களை இயக்குவதில்லை. இவர் இயக்கிய நான்கு திரைப்படங்களைப் பற்றி தான் நாம் இதில் பார்க்க போகிறோம். முதலாவது கில்லி நடிகர் விஜய்க்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படம். இந்த திரைப்படத்தில் விஜய், திரிஷா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருப்பார்கள். இந்த திரைப்படம் 50 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

   

 

தில் இந்த திரைப்படத்தில் விக்ரம் நடித்திருந்தார். இப்படம் விக்ரமின் கெரியரில் மிகப்பெரிய ஹிட்டு திரைப்படமாக அமைந்தது. இந்த திரைப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக லைலா நடித்திருப்பார்.

அடுத்ததாக தூள் இந்த திரைப்படத்திலும் விக்ரம் தான் ஹீரோவாக நடித்திருப்பார். இவருக்கு ஜோடியாக ஜோதிகா நடித்திருப்பார். இப்படத்தில் வந்த அனைத்து பாடல்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுத்திருந்தது. இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த திரைப்படம்.

ஒஸ்தி, இந்த திரைப்படத்தில் நடிகர் சிம்பு நடித்திருப்பார். இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து அசத்தி இருப்பார். இந்த திரைப்படத்தில் ரிச்சா கங்கோபாத்யா, சந்தானம், நாசர், ரேவதி, உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருப்பார்கள். இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.