மகன் தேவ் செய்த விஷியத்தால் நெகிழ்ந்துபோன அப்பா சூர்யா.. குவியும் வாழ்த்துக்கள்..

By Begam on சித்திரை 21, 2024

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகை ஜோதிகா. இவர் சினிமாவின் உச்சத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுதே,  நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்பொழுது இவர்களிருவரும் தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்து கொண்டுள்ளனர்.

   

திருமணத்திற்கு பிறகு திரையுலகை விட்டு விலகி இருந்தார் நடிகை ஜோதிகா . தொடர்ந்துபல ஹிட்  திரைப்படங்களை கொடுத்து வந்தார் நடிகர் சூர்யா. இவர்களுக்கு தற்பொழுது தியா, தேவ் என்று இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதைத்தொடர்ந்து நடிகை ஜோதிகா ’36 வயதினிலே’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு மாஸ் ரீ என்ட்ரி கொடுத்தார்.

   

 

தற்பொழுது அவர் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.  நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இருவருமே தற்பொழுது உடற்பயிற்சியில் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர். சமீபத்தில் கணவரும் மனைவியும் சேர்ந்து கொண்டு உடற்பயிற்சி செய்த வீடியோக்கள் வெளியாகி இணையத்தில் வைரலானது.

இவர்களின் பிள்ளைகளான  தேவ் மற்றும் தியா இருவரும் விளையாட்டுகளில் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் சூர்யாவின் மகனான தேவ், தற்போது கராத்தேவில் பிளாக் பெல்ட்டை வாங்கியிருக்கிறார். தனது மகனின் அந்த விளையாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சூர்யா மகனுடன் படிக்கும் சகா மாணவர்களையும் வாழ்த்தியுள்ளார். இதுதொடர்பான வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ….