கொளுத்தும் வெயிலில் நடனமாடி வரவேற்கும் முதியவர்… காரை நிறுத்தி அறந்தாங்கி நிஷா செய்த செயல்… பாக்கும் போதே கண்கலங்குதே…

By Begam on சித்திரை 21, 2024

Spread the love

தொலைக்காட்சிகளில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்ட பெண்களில் ஒருவர் அறந்தாங்கி நிஷா. இவர் காமெடி ஷோவில் செய்யும் காமெடிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் அவ்வளவு வரவேற்பு கிடைக்கும். சின்னத்திரை தான் இப்போது மக்களின் பெரிய பொழுதுபோக்காக உள்ளது. இவர் ‘கலக்க போவது யாரு’ நிகழ்ச்சியில் ஸ்டான்ட் அப் காமெடி செய்து பிரபலமானார்.

   

‘சின்னத்திரை நயன்தாரா’ என தன்னை பாசிட்டிவாகவே கூறிக் கொள்பவர் அறந்தாங்கி நிஷா. தன்னை யார் கிண்டல் செய்தாலும் அதனை சிறிதும் பொருட்படுத்தாமல் தனது திறமையால் மட்டும் முன்னேறிய அறந்தாங்கி நிஷா தற்போது  தொகுப்பாளினியாகவும், வெள்ளித்திரையில் ஏராளமான படங்களில் காமெடி நடிகையாகவும் நடித்து வருகிறார்.

   

 

நிஷாவின் கணவர் பெயர் ரியாஸ். அழகிய ஜோடியான இவர்களுக்கு ஒரு ஆண்குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது.   சென்னை மக்கள் மிக்ஜாம் புயலில் சிக்கி தவித்த போது அவர்களுக்கு தன்னால் முடிந்த பல்வேறு உதவிகளை செய்தார். இவரும் KPY பாலாவை போன்றே ஏழ்மையில் வாடுபவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.

அதுபோல தற்பொழுது அவர் கொளுத்தும் வெயிலில் ஹோட்டல் வாசலில் நின்று மகிழ்ச்சியோடு நடனமாடிக் கொண்டே வரவேற்கும் நபரை பார்த்து பிரமித்து, அவர்கள் அருகில் காரை நிறுத்தி, அவரிடம் உரையாடி விட்டு , அவருக்கு தன்னால் முடிந்த ஒரு தொகையை கையில் கொடுக்கிறார் . மேலும் அவரின் உழைப்பையும் மனதார பாராட்டியுள்ளார். தற்பொழுது இவரின் இந்த செயலை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Aranthai Nisha (@aranthainisha)