Connect with us

CINEMA

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களுடன் சர்ப்ரைஸான தகவலை வெளியிட்ட நடிகர் தனுஷ்… என்ன சொல்லி இருக்காருன்னு தெரியுமா…? 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். தனது தந்தை இயக்கிய ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர், காதல் கொண்டேன், திருடா திருடா என அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்தார். இடையில் ஒரு சில தோல்வி படங்களை கொடுத்தாலும் பொல்லாதவன், ஆடுகளம், அசுரன், போன்ற படங்களின் மூலம் தனது அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தினார் தனுஷ்.

   

ஆடுகளம், அசுரன் உள்ளிட்ட படங்களுக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை தனுஷ் வென்றுள்ளார். சமீபத்தில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படமும்  விமர்சன ரீதியிலும், வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து தற்பொழுது தனது 50 வது பட பணிகளில் தனது முழுக்கவனத்தையும் செலுத்தி வருகிறார்.

இத்திரைப்படத்திற்கு ‘ ராயன்’ என பெயரிட்டுள்ளனர். இந்தப் படத்தை தனுஷே இயக்கி, நடித்து வருகிறார். சன்பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்க ஏ.ஆர்.ரஹ்மான் ராயன் படத்திற்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தில் துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், செல்வராகவன், எஸ்.ஜே. சூர்யா போன்ற முக்கிய நடிகர்கள் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழர் புத்தாண்டான இன்று நடிகர் தனுஷ் ரசிகர்களுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் ஒன்றை கொடுத்துள்ளார். அதாவது ராயன் திரைப்படத்தின் first single விரைவில் ரிலீஸாக உள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இதனை தனுஷ் ரசிகர்கள் தற்பொழுது கொண்டாடி வருகின்றனர். இதோ அந்த பதிவு…

Continue Reading

More in CINEMA

To Top