சிறகடிக்க ஆசை சீரியலில் ஹீரோவாக முதலில் தேர்வானது அந்த பிரபல நடிகர் தானாம்.. நல்ல சான்ஸ் மிஸ் பண்ணிட்டாரே..!!

By admin on சித்திரை 13, 2024

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது சீரியல் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என மக்கள் பாராட்டும் விதமாக சிறகடிக்க ஆசை சீரியல் அமைந்துள்ளது. தற்போது சிறப்பான கதை களத்துடன் வெற்றி கரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் இதுதான்.

   

தாலி பிரித்து கோத்த நிகழ்ச்சியில் நடந்த பிரச்சனையால் சுருதி வீட்டிற்கு வராமல் இருப்பதால் விஜயா வெறுப்பின் உச்சத்தில் இருக்கிறார். ஒவ்வொரு நாளும் அடுத்து என்ன நடக்கப்போகிறது என ரசிகர்கள் எதிர்பார்ப்பின் உச்சத்தில் இருக்கும் வகையில் சீரியல் அமைந்துள்ளது.

   

 

இந்த நிலையில் வெற்றி வசந்த் முத்து கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து வருகிறார். இதன் மூலம் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால் முதலாவதாக முத்து கதாபாத்திரத்தில் நடிக்க வெற்றி வசந்த் தேர்ந்தெடுக்கப்படவில்லையாம்.

முன்னதாக இதயத்தை திருடாதே, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள் ஆகிய சீரியல்களில் ஹீரோவாக நடிக்கும் நவீன் தான் முதலில் சிறகடிக்க ஆசை சீரியலில் நடிப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆனால் சில காரணங்களால் நவீன் சிறகடிக்க ஆசை சீரியல் வாய்ப்பை நிராகரித்துள்ளார். அதன் பிறகு வெற்றி வசந்த் முத்து கதாபாத்திரத்தில் நடிக்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.