கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “எங்க வீட்டு மாப்பிள்ளை” என்ற ரியாலிட்டி ஷோவின் மூலம் மக்களிடம் பரிச்சயமானவர் அபர்ணதி. சமூக வலைத்தளங்களின் மூலம் மிகவும் பிரபலமாக ஆன அபர்ணதி “தேன்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து “ஜெயில்”, “உடன்பால்”, “டிமான்” போன்ற திரைப்படங்களில் நடித்த அபர்ணதிக்கு “இறுகப்பற்று” திரைப்படம் நல்ல பெயரை கொடுத்தது. அதனை தொடர்ந்து “மாயப்புத்தகம்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் சில திரைப்படங்களிலும் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த நிலையில் அபர்ணதி படப்பிடிப்பின்போது பல தொல்லைகளை தருவதாக புகார்கள் எழுகின்றனவாம்.
அதாவது படப்பிடிப்பின்போது ஒரு முறை மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது. கேரவானில் இருந்து வெளியே வந்த அபர்ணதி, கேரவான் நிர்வாகத்தினரை கண்டபடி திட்டத் தொடங்கிவிட்டாராம். அவரிடம் வாக்குவாதம் செய்த நிர்வாகத்தினர் கேரவானை எடுத்துச் சென்றுவிட்டார்களாம்.
தனக்கு புது கேரவான் கொண்டு வரவேண்டும், அப்போதுதான் நடிப்பேன் என்று ஒற்றைக்காலில் நின்றாராம். ஆனால் புதிய கேரவானை படக்குழுவினரால் தயார் செய்ய முடியவில்லை. ஆதலால் தனது காரை படப்பிடிப்புத் தளத்திற்குள் கொண்டு வந்து உள்ளே ஏசி போட்டு அமர்ந்துகொண்டாராம்.

மேலும் ஒரு நாள் படப்பிடிப்பின்போது பல மணி நேரம் கேரவானுக்குள்ளேயே இருந்துகொண்டு வெளியே வரவில்லையாம். இதனால் படப்பிடிப்பு தாமதமாகி இருக்கிறது. இவ்வாறு அபர்ணதியை குறித்து பல புகார்கள் எழுகின்றனவாம்.
