திடீரென ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலை விட்டு விலகிய பிரபல நடிகை… இனி அவருக்கு பதில் இந்த சன் டிவி நடிகை நடிக்க போறாங்களாம்…

By Begam on சித்திரை 13, 2024

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரும் ஆதரவை பெற்று ஒளிபரப்பான சீரியல் தான் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. இந்த சீரியலின் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து தற்பொழுது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் ஸ்டாலின் முத்து, நிரோஷா ராஜ்குமார், மனோகரன், வி ஜே கதிர்வேல் கந்தசாமி, வசந்த் வஷி, ஆகாஷ் பிரேம்குமார், ஹேமா, ஷாலினி, சரண்யா துரடி  போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

   

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலை இயக்குனர் ஐ டேவிட் இயக்கி வருவதும் குறிப்பிடத்தக்கது. ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முதல் பாகம் அண்ணன், தம்பி பாசத்தை வைத்து ஒளிபரப்பப்பட்டது போல, தற்போது இந்த சீரியல் அப்பா, பிள்ளைகள் பாசத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் மாரி என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை ரிஹானா. இந்த பாத்திரத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

   

 

இந்நிலையில் நடிகை ரிஹானா தற்பொழுது திடீரென்று இந்த சீரியலை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து ரசிகர்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளித்த அவர், ‘தன்னுடைய தனிப்பட்ட காரணத்திற்காக இந்த சீரியலில் இருந்து விலகுவதாகவும், தொடர்ந்து இந்த சீரியலாவது கேரக்டர் பயணித்துக் கொண்டே இருப்பதால் பிரேக் எடுக்க முடியாத காரணத்தால் விலக வேண்டிய சூழல் ஏற்பட்டிருப்பதாகவும்,

உங்கள் எல்லாரையும் போல நானும் பாண்டி ஸ்டோர்ஸ் குடும்பத்தை மிஸ் செய்வதாகவும்’ கூறியுள்ளார். தற்பொழுது நடிகை ரிஹானாவுக்கு பதிலாக சன் டிவியில் ‘இனியா’ தொடரில் நடித்து வரும் நடிகை மாதவி புதிய மாரியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.