கோமாளி படத்தை இயக்கத்தின் மூலம் பிரதிப் ரங்கநாதன் திரைத்துறையில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு பிரதிப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே படம் மக்களிடைய நல்ல வரவேற்பை பெற்றது. ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் உருவான லவ் டுடே படம் சூப்பர் ஹிட் ஆகி 100 கோடி வசூல் செய்ததால் பிரதீப் ரங்கநாதரின் மார்க்கெட் வேல்யூ அதிகரித்துக் கொண்டே போனது.

தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் எல்ஐசி படத்தில் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்குள் எல்ஐசி படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர் சுமார் 5000 கோடி ரூபாய் செலவில் கோலிவுடில் 12 படங்களை தயாரிக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியானது.

அதில் மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் ஒரு படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை அறிமுக இயக்குனரான கீர்த்தி ஈஸ்வரன் என்பவர் இயக்க உள்ளார். கீர்த்தி ஈஸ்வரன் சுதா கொங்கராவிடம் அசிஸ்டன்ட் டைரக்டராக வேலை பார்த்துள்ளார். இந்நிலையில் கீர்த்தி ஈஸ்வரன் மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தினரிடம் சென்று தனது கதையை கூறியுள்ளார்.

அவர்களுக்கு கதை மிகவும் பிடித்து போனதால் உடனே அட்வான்ஸ் தொகை கொடுத்து கீர்த்தி ஈஸ்வரனை கமிட் செய்து விட்டனர். இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் ஏற்கனவே கீர்த்தி ஈஸ்வரன் பிரதீப்பை சந்தித்து ஒரு வருடத்திற்கு முன்பே அந்த கதையை கூறியிருந்தாராம். அந்த கதை பிரதீப்புக்கும் பிடித்து போய்விட்டது. படத்தின் தயாரிப்பு நிறுவனம், இயக்குனர், நடிகர் என அனைத்தும் ரெடியாக இருந்தாலும் செப்டம்பர் மாதம் தான் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனென்றால் ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்தை ஓ மை கடவுளே படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து தான் இயக்குகிறார். அந்த படத்தை முடித்துவிட்டு வருகிற செப்டம்பர் மாதம் கீர்த்தீ ஈஸ்வரன் இயக்கும் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

