களவாணி படத்தில் விமலுக்கு தங்கையாக நடித்த நடிகை இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா..? வைரலாகும் வீடியோ..!!

By admin on சித்திரை 8, 2024

Spread the love

விமல் நடித்த களவாணி திரைப்படம் மக்களிடைய நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் விமலுக்கு தங்கையாக நடித்தவர் மனிஷா பிரியதர்ஷினி. இவர் ஒரு சில படங்கள் மற்றும் சின்னத்திரை சீரியல்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

   

ஒருமுறை சீரியல் வாய்ப்பு தேடிய போது தனக்கு சான்ஸ் கொடுத்த ஒரு சீரியல் ரைட்டர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது குறித்து ஒரு இன்டர்வியூவில் அவர் கூறியிருந்தார். தற்போது சீரியல்களில் மனிஷா பிரியதர்ஷினி நடிக்கவில்லை. எல்எல்பி சட்டப்படிப்பு படித்த மனிஷாவுக்கு புத்தகங்கள் வாங்க நடிகர் ஜெய் உதவினார்.

   

 

அவர் மனிஷா படிப்பதற்கு தேவையான அனைத்து புத்தகங்களையும் வாங்கி கொடுத்தார். மனிஷாவுக்கு கலெக்டர் ஆக வேண்டும் என ஆசை. இதனால் படிப்புக்கான எல்லா உதவிகளையும் செய்வேன். நீ நன்றாக படித்து கலெக்டராக வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.

களவாணி படத்தில் சுட்டி பெண்ணாக நடித்த மனிஷா இப்போது எப்படி இருக்கிறார் என தெரியுமா? அவரது லேட்டஸ்ட் புகைப்படம் சமூகவலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதனைப் பார்த்த ரசிகர்கள் விமலுக்கு தங்கையாக நடித்த சிறுமியா இது என கமெண்ட் செய்து வருகின்றனர்.