காதல் படத்தில் சந்தியாவின் தோழியாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை சரண்யா. அதன்பின் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பேராண்மை படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தது மூலம் பிரபலமானார். அதன்பின் பட வாய்ப்பு இல்லாமல் ஆளே எங்கு இருக்கிறார் என பலரும் கேட்டனர்.

Actress Saranya
அப்படிப்பட்ட சரண்யா ஆறு வருடங்கள் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த நிலையில் தற்போது மீண்டும் மீடியா வெளிச்சத்திற்கு வந்துள்ளார். புஸ்கரா என்ற டப்பிங் ஸ்டுடியோவை ஆரம்பித்துள்ளார். இதுகுறித்து அவர் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, நான் சிறுவயதிலே அம்மா அப்பாவை இழந்துவிட்டேன். அப்பா மரணித்துவிட்டார், அம்மா வேறு ஒரு வாழ்க்கையை தேடி கொண்டார். இதனால் நான் நிறைய அவமானப்பட்டேன்.

Peranmai actress saranya
அதன்பின் தான் சினிமா வாய்ப்பு கிடைத்தது, அதுவும் சரியாக அமையவில்லை. பின் எஸ்.பி,ஜனநாதனிடம் வேலை செய்தேன். அந்த சமயத்தில் எனக்கு தைராய்ட் பிரச்சனை இருந்தது. இதனால் உடல் எடை அதிகமாக ஆரம்பித்தேன். ஒருகட்டத்தில் மீடியா பார்வைக்கு வராமல் மறைந்து இருந்தேன். எஸ்.பி.ஜனநாதனின் மறைவு என்னை பெருமளவில் பாதித்தது. கையில் வெறும் 700 ரூபாய் தான் இருந்தது.
அப்போது யோகிபாபுவின் பேட்டி ஒன்றை கண்டேன், அதில் அவர் திருத்தணி முருகனால் வாழ்வு மாறியதாக சொன்னார். நானும் திருத்தணி செல்ல திட்டமிட்டேன். கையில் காசே இல்லை, கவர்மெண்ட் பஸ்ஸில் ஏறி திருத்தணி சென்று வந்தேன். என் வாழ்வே தலைகீழாக மாறிவிட்டது.கடவுள் என்னுடன் இருப்பதை நான் உணர்ந்தேன். என் வாழ்வில் பல அதிசயங்கள் நடந்தது.

Actress Saranya about her life
சரியாக ஒரே வருடத்தில் நான் சினிமா போஸ்ட் புரடக்ஷன் ஸ்டுடியோவே ஆரம்பித்து விட்டேன். முதலில் என் பீரோவை திறந்தாள் நாலு டிரஸ் தான் இருக்கும், இப்போது பீரோ முழுக்க துணிகள். நல்ல தொழில், நல்ல வாழ்க்கை அமைந்துள்ளது, இது அனைத்தும் முருகனால் தான் என தன் வாழ்ககையில் நடந்த அதிசயம் குறித்து பகிர்ந்துகொண்டார் சரண்யா.
