திரையரங்குகளில் சூப்பராக ஓடிக் கொண்டிருக்கும் ஆடு ஜீவிதம் படம் 14 ஆண்டுகால உழைப்பால் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் பிரித்திவிராஜ் ஹீரோவாக நடித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் 28-ஆம் தேதி படம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகி அமோக வரவேற்புகளை பெற்றது.

சிறப்பு திரையிடலில் படத்தை பார்த்த கமல், மணிரத்தினம் உள்ளிட்டோர் இயக்குனரையும், பிரித்விராஜையும் பாராட்டி வருகின்றனர். ஆடு ஜீவிதம் படம் மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி வசூல் சாதனை படைத்துள்ளது.

ரிலீஸ் ஆன சில நாட்களிலேயே படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இதனால் பட குழுவினர் மிக்க மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த நிலையில் ஆடு ஜீவிதம் படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க விக்ரமை தான் கேட்டார்களாம்.

ஆனால் ஒரு சில காரணங்களால் அவரால் நடிக்க முடியவில்லை. இதனால் பிரித்திவிராஜ் ஹீரோவாக நடித்துள்ளார். ஒருவேளை விக்ரம் இந்த படத்தில் நடித்திருந்தால் படம் பிரம்மாண்டமாக அமைந்திருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

#image_title
