பிரபல நடிகரான விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் டி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். மேலும் பிரசாந்த், பிரபு உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். டைம் ட்ராவலை மையமாக வைத்து கதை இயக்கப்பட்டுள்ளது.

தனது 69-ஆவது படத்தை முடித்துவிட்டு சினிமாவில் இருந்து விலகி அரசியலில் ஈடுபட போவதாக விஜய் ஏற்கனவே அறிவித்தார். மேலும் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியையும் தொடங்கினார். கோட் படத்தின் ஷூட்டிங் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.

விரைவில் படம் குறித்த கூடுதல் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே தளபதியின் 69 ஆவது படத்தை இயக்கப் போகும் நடிகர் யார் என்ற கருத்து நிலவி வந்தது. அட்லி, வெற்றிமாறன், வினோத் இவர்களில் ஒருவர் அந்த படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் டிவிவி என்டர்டைன்மென்ட் தயாரிக்கும் தளபதியின் 69ஆவது படத்தை எச்.வினோத் இயக்க உள்ளதாக தெரிகிறது. மேலும் அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க த்ரிஷா, அலியா பட், சமந்தா, மிருனாள் தாகூர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த படத்தில் நடிக்கப் போகும் நடிகை 10 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்குவார் என கூறப்படுகிறது. எந்த ஹீரோயின் விஜயின் 69 ஆவது படத்தில் நடிக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மாபெரும் பட்ஜெட்டில் உருவாகும் தளபதியின் 69 ஆவது படத்திற்கு விஜய்க்கு 250 கோடி ரூபாய் சம்பளம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

