இன்று தன் பிறந்தநாளை கொண்டாடும் நேஷனல் கிரஷ் ராஷ்மிகா.. 28 வயதில் இத்தனை கோடிகளுக்கு அதிபதியா..?

By admin on சித்திரை 5, 2024

Spread the love

நேஷனல் கிரஷ் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் ராஷ்மிகா மந்தனா ஏராளமான சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். முதலில் ராஷ்மிகா மந்தனா விஜய் தேவரகொண்டா உடன் இணைந்து நடித்த கீதா கோவிந்தம் படம் சூப்பர் ஹிட் ஆனது. அதன் பிறகு ரஷ்மிகா நடித்த டியர் காம்ரேட் படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை. பின்னர் புஷ்பா உள்ளிட்ட படங்களில் ரஷ்மிகா நடித்தார்.

   

கார்த்தி நடித்த சுல்தான் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ராஷ்மிகா என்ட்ரி கொடுத்தார். பின்னர் விஜயுடன் வாரிசு திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி திரைப்படங்களில் ராஷ்மிகா நடித்து வருகிறார். கடைசியாக அவரது நடிப்பில் வெளியான அனிமல் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

   

 

அனிமல் படத்தின் வெற்றிக்கு பிறகு ராஷ்மிகா தனது சம்பளத்தை உயர்த்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ராஷ்மிகா மந்தனா இன்று தனது 28-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரை பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ராஷ்மிகா 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள பென்சி கிளாஸ், 40 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஆடி கியூ 3 சொகுசு கார்கள், ரேஞ்ச் ரோவர் கார் ஆகியவற்றை வைத்துள்ளார். இது மட்டுமில்லாமல் பெங்களூர், ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட இடங்களில் சொகுசு பங்களாக்களும் உள்ளது. ரஷ்மிகாவிடம் 45 முதல் 50 கோடி ரூபாய் வரை சொத்து இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் பல்வேறு தொழில்களில் தான் சம்பாதித்த பணத்தை முதலீடு செய்தும் வருமானம் ஈட்டி வருகிறாராம்.