நடிகை மோனா பெட்ரே பிரபல சீரியல் நடிகை ஆவார் இவர் கல்யாணப்பரிசு என்ற சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானார். அதன் பிறகு மிஷ்கின் இயக்கி தயாரித்த ஓநாயும் ஆட்டுக்குட்டியும் என்ற திரைப்படத்தில் நடிகை நீலிமா ராணியுடன் இணைந்து மோனா பெட்ரே நடித்தார்.

மோனா பெட்ரே பகல் நிலவு சீரியலில் ஆண்டாள் கதாபாத்திரத்திலும், கல்யாணப்பரிசு 2 சீரியலில் மல்லிகா கதாபாத்திரத்திலும் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தினார்.

தற்போது மோனா பெட்ரே விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலை பார்ப்பதற்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் நடிகை மோனா தனது கணவர் மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதனை பார்த்து ரசிகர்கள் நடிகை மோனாவுக்கு இவ்வளவு பெரிய மகளா என ஆச்சரியத்தில் உள்ளனர்.
View this post on Instagram
