வானவராயன் வல்லவராயன் பட ஹீரோயின் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா..? ஆள் அடையாளமே தெரியாமல் மாறிட்டாங்களே..!!

By Priya Ram on ஏப்ரல் 2, 2024

Spread the love

நடிகை மோனல் கஜார் முதலில் தெலுங்கு சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். முதல் படத்திலேயே அவருக்கு சிறந்த நடிகைக்கான சைமா விருது வழங்கப்பட்டது. கடந்த 2014-ஆம் ஆண்டு விக்ரம் பிரபு சத்யராஜ் நடிப்பில் வெளியான சிகரம் தொடு படத்தில் மோனல் கஜார் ஹீரோயினாக தமிழில் அறிமுகமானார்.

   

அதன் பிறகு வானவராயன் வல்லவராயன் படத்திலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அவர் நடித்த இரண்டு படங்களுக்கும் சரியான வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் அடுத்த பட வாய்ப்பு கிடைக்காமல் இருந்தார்.

   

 

தற்போது மலையாளம், ஹிந்தி, குஜராத்தி, மராத்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஆனால் குஜராத்தி படங்களை தவிர்த்து மற்ற மொழி படங்களுக்கு அவருக்கு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை.

அவர் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆனால் அங்கு கிளாமரான உடைகளை மட்டும் அணிந்ததால் அவர் மீது பல விமர்சனங்கள் வந்தது. தற்போது குஜராத் படங்களிலேயே பிஸியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் மோனல் கஜோரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியானது. அதனை பார்த்த ரசிகர்கள் வானவராயன் வல்லவராயன் படத்தில் நடித்த நடிகையா? ஆள் அடையாளமே தெரியாமல் இப்படி மாறிட்டாங்களே என கமெண்ட் செய்து வருகின்றனர்.