எம்.ஜி.ஆர் சரோஜா தேவி ஜோடி முதல் முறையாக இணைந்த ‘திருடாதே’.. மூன்று வருட தாமதத்தின் பின்னணி என்ன?

By vinoth

Updated on:

தமிழ் சினிமாவில் கொஞ்சும் தமிழ் பேசி ரசிகர்களைக் கவர்ந்தவர் சரோஜா தேவி. கர்நாடகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட அவரை தமிழ் ரசிகர்கள் கன்னடத்துப் பைங்கிளி என்று சொல்லி அழைத்து கொண்டாடினர். இவர் தமிழில் 1957ஆம் ஆண்டு வெளியான தங்கமலை ரகசியம் படத்தின் மூலம் அறிமுகமானார்.

அவர் நடித்த படங்கள் ஹிட்டடித்த நிலையில் முன்னணி நடிகையானார். எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி, முத்துராமன் என பல முன்னணி தமிழ் நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார் நடிகை சரோஜா தேவி. தமிழில் மட்டுமே 100 படங்களுக்கு மேல் நடித்துள்ள அவர் கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.

   

தமிழில் முதல் முதலாக அவர் எம் ஜி ஆருக்குக் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆன திரைப்படம்தான் திருடாதே. இந்த படத்துக்காக எம் ஜிஆர் தினமும் மாலை வேளைகளில் மட்டும் கால்ஷீட் தர, அதனால் ஹீரோயின் புதுமுகமாக இருந்தால் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அவரை வைத்து ஷூட் செய்துகொள்ளலாம் என சரோஜா தேவியை ஒப்பந்தம் செய்துள்ளார் தயாரிப்பாளர் சின்ன அண்ணாமலை.

ஆனால் எதிர்பாராத விதமாக திருந்தாதே பட ஷூட்டிங்கின் போது எம் ஜி ஆருக்கு விபத்து ஒன்று ஏற்பட்டு காலில் அடிபட்டுள்ளது. அதனால் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு திருந்தாதே படத்தின் ஷூட்டிங் நடக்கவே இல்லை. மூன்று ஆண்டுகளில் சரோஜா தேவி ஏகப்பட்ட ஹிட் படங்களில் நடித்து நம்பர் 1 நடிகையாகிவிட்டார்.

3 ஆண்டுகளுக்கு ஷூட்டிங் தொடங்கிய போது சரோஜா தேவியின் கால்ஷீட்டிக்காக படக்குழு காத்திருக்க வேண்டிய சூழல் உண்டானதாம். அப்படி ஷூட்டிங் நடத்தப்பட்ட திருடாதே திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்து வசூலைக் குவித்துள்ளது.