பா பாண்டி படத்திற்கு பின்பாக நீண்ட வருடம் கழித்து தனுஷ் அவர்களே எழுதி இயக்கும் படம் தான் “ராயன்”. இப்படம் தனுஷின் ஐம்பதாவது படம் என்பதால் மிக எதிர்பார்ப்புடன் எடுக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் மாபெரும் பிரபலங்களாக செல்வராகவன், எஸ் ஜே சூர்யா, அபர்ணா பால முரளி, சந்திப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், நித்தியா மேனன், தசரா விஜயன் இப்படத்தில் நடித்து வருகிறார்கள்.
சமீபத்தில் இப்படத்தில் செல்வராகவன் ஆவர்கள் நடிக்கிறார் என்று, தனுஷ் தன் இணைய பக்கத்தில் மாபெரும் இயக்குனர் செல்வராகவன் சாரை வைத்து இயக்குவது எனக்கு மிகப் பெருமையான விஷயம் என்று பதிவு ஒன்று போட்டு இருந்தார். அதற்கு செல்வராகவன் பெருமிதமாக நன்றி சொல்லி மறுப்பதிவு ஒன்று போட்டிருந்தார். இப்படத்தில் பிரபல லெஜன்ட் சேர்ந்திருப்பதால், ரசிகர் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளது. தனுஷ் ஐம்பதாவது படம் முடிந்தபின், அவருக்கு அடுத்தடுத்து படங்கள் குவிந்த வண்ணமாக இருக்கிறது.
அதில் தெலுகு, மலையாளம், ஹிந்தி போன்ற படங்களும் அடங்கும். தனுஷின் ராயன் படம் முடிந்தபின் பாலிவுட்டில் களம் இறங்க உள்ளார். ஹிந்தியில் உள்ள பிரபல இயக்குனர் ஒருவர் தனுஷ் அவர்களை வைத்து 51 வது படமான Tereishkmain படத்தை இயக்க உள்ளார். அதன் பின்னதாக இப்படம் முடிந்த பின் தெலுங்கு படத்தில் மாபெரும் இயக்குனர் ஒருவர் தனுஷை வைத்து குபேரன் என்ற படத்தை இயக்க உள்ளார். இப்படம் வருகின்ற 2026 வெளியாகும் என்று தெரிவித்திருக்கிறார்கள். மலையாளத்தில் வெளியாகி இந்திய முழுவதும் சக்க போடு போட்ட படம் தான் மஞ்சுமெல் பாய்ஸ்,
தற்போது இப்பட இயக்குனரை நேரில் சந்தித்து படத்தின் வெற்றியை பற்றி பேசி பாராட்டியுள்ள தனுஷ், தனுஷின் 53 ஆவது படத்தை மஞ்சுமெல் பாய்ஸ் இயக்குனர் சிதம்பரம் அவர்கள் தான் இயக்க உள்ளதாக தகவல் கசிந்து உள்ளது. இவர் எடுத்த மஞ்சமெல் பாய்ஸ் தமிழ்நாட்டில் மாபெரும் வரவேற்பு கிடைத்ததை வைத்து, இவர் தனுஷ் உடன் இணைவது ரசிகர் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
