நடிகர் சங்கம் கட்டிடம் கட்ட மிகப்பெரிய தொகையை கொடுத்த கமல்.. அப்போ விரைவில் பில்டிங்-ஆ பாக்கலாமா..

By Ranjith Kumar

Published on:

கடந்த பல வருட காலமாக நடிகர் சங்கத்தின் கட்டிடம் கட்டுவதான விஷயத்தில் பல பிரச்சினைகள் வந்து கொண்டிருக்கிறது. கட்டிடம் கட்ட ஆரம்பித்ததில் இருந்து இதுவரை பணப் பிரச்சனை, நடிகர் சங்கத்தின் உறுப்பினர் பிரச்சனை, தலைவருக்கான போட்டியிடும் பிரச்சனை என்று இதுவரை சங்கம் பல பிரச்சினைகளை சந்தித்து, பேசி சமாதானம் செய்து வைத்துள்ளது.

2000 கால கட்டத்தில் விஜயகாந்த் அவர்கள் நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்த பொழுது தனது நிர்வாக திறமையால் நடிகர் சங்கத்தின் உறுப்பினர்கலை அழைத்து மாபெரும் விழாக்களை நடத்தி, சங்கத்தின் முன்னேற்றத்திற்காக நாடு நாடாக சென்று எல்லோரிடமும் பேசி பணத்தைப் பெற்று, சங்கத்தில் முன்னேற்றத்திற்கும், சங்கத்திற்கு தேவைப்படும் விஷயங்களை பூர்த்தி செய்துள்ளார். தற்போது அவர் அந்த காலகட்டத்தில் தன் முழு திறமையை சினிமாவிலும், தென் இந்தியா நடிகர் சங்கத்தின் நிர்வாகத்திலும் காண்பித்திருந்தார்.

   

அவர் நிர்வாக பொறுப்பில் இருந்த பொழுது சினிமா துறையில் எவ்வளவு பெரிய பிரச்சினை வந்தாலும், ஒற்றையாலாக நின்று அதை சமாளித்து வந்தார். தற்போது அவர் பதவியில் இருந்து விலகிய பின் சங்கத்தில் பல பிரச்சினைகள் உண்டாக்கி கொண்டிருக்கிறது. தலைவர் பிரச்சினையில் இருந்து பணப்பிரச்சினை வரை நடந்து கொண்டிருக்கிறது. தற்போது பலகாலமாக சங்கத்தின் கட்டிடம் பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதற்காக பிரபல நடிகர்களிடம் சென்று தலா ஒரு கோடி ரூபாய் வரையும் பெறலாம் என்று சங்க உறுப்பினர்கள் முடிவு செய்திருந்தார்கள்.

அதை உதயநிதி ஸ்டாலின் முதல் முதலாக ஒரு கோடி ரூபாவை கொடுத்து துவங்கி வைத்திருந்தார். அதை தொடர்ந்து பலரும் கொடுக்க ஆரம்பிப்பார்கள் என்று நினைத்தபடி, தற்போது கமல்ஹாசன் சங்கத்தின் தலைவர் விஷால், கார்த்தியை அழைத்து ஒரு கோடி ரூபாய் காசோலையை கொடுத்து இருக்கிறார். சங்கத்தின் வளர்ச்சிக்காகவும் கட்டிடம் கட்டும் பணிக்காகவும் கமல்ஹாசனால் முடிந்த பணத்தை கொடுத்துள்ளார்.

author avatar
Ranjith Kumar