தளபதி 69 வது படத்தை எடுக்கப் போவது இந்த இருவரில் ஒருவர் தான்.. விஜய் Ok சொன்ன உடனே சம்பவம் loading…

By Ranjith Kumar on மார்ச் 9, 2024

Spread the love

AGS என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், மீனாட்சி சவுத்ரி இணைந்து நடித்து வரும் படம் தான் GOAT. இப்படம் கடந்த சில மாதமாக விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் விஜய் டபுள் ஆக்சன் ரோலில் நடித்துள்ளார். அப்பா மற்றும் மகனாக இரு வேடங்களில் நடிக்கும் விஜயின், மகன் கதாபாத்திரத்திற்கு முழுக்க முழுக்க vfx, CG மூலம் தயார் செய்து வருகிறார்களாம். இப்படத்தின் சில அப்டேட்களை அவ்வப்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பு படி வெங்கட் பிரபு வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.

விஜய் முழுக்க முழுக்க அரசியல் ஈடுபட உள்ளதால் கடைசியாக இருக்கும் ரெண்டு படங்கள் மிக கவனிக்கப்பட்டு வருகிறது. அதனால் இப்படத்தை மிகச் சிறப்பாக தந்தாக வேண்டும் என்று இயக்குனர்கள் கையில் அந்த பொறுப்பு இருக்கிறதால், படத்தை பார்த்து பார்த்து செதுக்கு கொண்டிருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு. இதற்கிடையே விஜய் அவர்கள் தன் கட்சியான தமிழக முன்னேற்றக் கழகத்தின் ஆள்சேர்ப்பிற்காக செயலி ஒன்றை உருவாக்கி நேற்று அதை மக்களுக்கு முன்னால் அறிமுகம் செய்திருந்தார். அதை அவர் அறிமுகம் செய்த உடனே இணையதளமே சம்பித்துப் போகும் அளவிற்கு 20 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்துள்ளார்கள்.

   

இதற்கிடையே விஜயின் கடைசி படமான 69 படம் யார் இயக்க உள்ளார் என்று மிகவும் பேசப்பட்டு வருகிறது. விஜயின் 69 படத்தை புரொடியூஸ் செய்யப் போவது தெலுங்கு நிறுவனம் என்பதால், இப்படத்தை தெலுங்கு இயக்குனர் திரு விக்ரம் அவர்களை இயக்க வேண்டுமென்று அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளார்கள். ஆனால் விஜயிம் தற்போது இரண்டு வாரத்திற்கு முன்பாக எச். வினோத் கதை சொல்லி உள்ளார். அந்த கதை விஜய்க்கு பிடித்துப் போக, எச் வினோத்தை படத்தில் நடிக்கலாம் என்று விஜய் முடிவு செய்துள்ளார்.

   

ஆனால் தயாரிப்பு நிறுவனம் திரு விக்ரமை முன் வைக்கிறார்கள். இதற்கிடையே விஜய் GOAT படத்தை முடித்த நிலையில், இன்னும் பத்து நாட்களில் அடுத்த படத்தை யார் இயக்க வேண்டும் என்று முடிவு செய்து தெரிவிப்பதாக கூறியுள்ளாராம். ஆனால் இன்னும்வரை விஜயின் 69 படத்தை யார் இயக்க உள்ளார்கள் என்று அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை.