அடுத்ததாக ஹிந்தியில் களம் இறங்கும் யோகி பாபு.! PAN இந்தியா ஸ்டார் ஆகுவதற்கு போடப்பட்ட அஸ்திவாரம்..

By Ranjith Kumar on பங்குனி 5, 2024

Spread the love

தமிழில் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான கலகலப்பு படம் மூலம் அறிமுகமானவர்தான் “யோகி பாபு”. அதன் பின் பல படங்களை நடித்து முன்னணி காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். வாரிசு, மெர்சல், சர்க்கார், விவேகம், தர்பார் போன்ற படங்களில் காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருந்தார். ஆனால் தற்போது மாபெரும் இயக்குனர்களின் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் பெரிதளவு தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு நடிகர் என்று கூறலாம். மண்டேலா, பொம்மி போன்ற படங்கள் இதில் அடங்கும்.

இவர் தற்போது ஹிந்தியில் அட்லி அவருடன் இணைந்து ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த “ஜவான்” படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இந்திய அளவில் மிகப் பிரபலமாகியுள்ளார். ஆனால் தற்போது அந்த ஜவான் படம் தமிழ் பதிப்பில் மட்டும் தான் இவர் நடித்தார். ஹிந்தி பதிப்பில் பாலிவுட்டில் உள்ள பிரபல காமெடி நடிகர் நடித்திருந்தார். இருப்பினும் ஹிந்தியில் இவர் ஜவான் படம் மூலம் பிரபலமாக தான் இருந்தார்.

   

தற்போது பாலிவுட் பிரபல இயக்குனர் ஆன “அனீஸ் பஸ்மி” அவர்கள் யோகி பாபுவை வைத்து ஹாரர் ஃபிலிம் இயக்க உள்ளதாக தகவல் வழியாக இருக்கிறது. இதற்கு முன்னால் அனீஸ் பஸ்மி ரெடி, நோ ப்ராப்ளம், வெல்கம், நோ என்ட்ரி, நோ என்ட்ரி மெய்ன் என்ட்ரி, சிங் ஸ் கின் போன்ற பிரபல படங்களை இயக்கியுள்ளார். ஹிந்தியில் இவர் ஷாருக்கான், சல்மான்கான், அமிதாப்பச்சன் என்று பலரையும் வைத்து மாபெரும் வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார்.

   

தற்போது இவர் யோகி பாபு நடிப்பை கண்டு வியந்து இவருடன் இணைந்து படம் பண்ண வேண்டும் என்று தற்போது ஹாரர் மூவி ஒன்று இயக்க உள்ளதாக, அப்பிடத்தில் யோகி பாபுவை மையமாக வைத்து படம் இயக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இனிமேல் யோகி பாபு ஹிந்தியிலும் மிக பிஸியான நடிகராக வலம் வர உள்ளார்.